புதுச்சேரியில் காங்கிரஸ் தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன்: வே.நாராயணசாமி

DIN 3rd May 2021 11:54 AM

புதுச்சேரியில் காங்கிரஸ் தோல்விக்கு முழு பொறுப்பேற்பதாக வே.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட அறிக்கை: புதுவை மாநிலத்தில் 2021 ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு, முன்னாள் முதலமைச்சராக பணியாற்றிய நான் முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன்.

புதுச்சேரி மாநில மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நான் தலை வணங்குகிறேன் என்று, நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் 2 இடங்களையும், திமுக 6 இடங்களையும் கைப்பற்றியது.