அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்



கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

இந்தியாவில் ஒரேநாளில் 53,601 பேருக்கு கரோனா; 871 போ் பலி

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் கூறியதாவது: நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 53,601 பேருக்கு கரோனா தொற்று உறுதி உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 22,68,675ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 871 போ் பலியாகியுள்ளனர். இதன்மூலம் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 45,257 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் 22 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில்,  நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 62,064 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,15,074ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில்1,007 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஒட்டுமொத்தமாக பலியானோரின் எண்ணிக்கை 44,386ஆக உயர்ந்துள்ளது. தற்போது, கரோனாவால் பாதிக்கப்பட்டு 6,34,945 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகளவில் 2 கோடியைத் தாண்டிய கரோனா பாதிப்பு

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டிதுள்ளது. இதன்படி 2,00,24,263 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 733,995 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.  அமெரிக்காவில் ஒரே நாளில் 47 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 52 லட்சத்தை நெருங்குகிறது. 

மகாராஷ்டிரத்தில் 18 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

மகாராஷ்டிரத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 9,181 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,938 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 4,938 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 5,914 பேருக்கு தொற்று; பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்தது!

 தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,914 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
 

ரஷியாவில் கரோனா பலி 15 ஆயிரத்தைத் தாண்டியது!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70 பேர் உள்பட இதுவரை 15,001 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

 

பரிசோதனையில் 'நெகட்டிவ்'; முதல்வர் எடியூரப்பா ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ்?

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு இன்று இரண்டாவது முறையாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. விரிவான செய்திக்கு..

மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கரோனா

மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சரவணனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விரிவான செய்திக்கு..

போர் வீரரைப் போல கரோனாவை எதிர்கொள்ளுங்கள்: பஞ்சாப் முதல்வர்

 ஒரு போர் வீரரைப் போல கரோனவை எதிர்கொள்ளுங்கள் என்று பஞ்சாப் மாநில மக்களுக்கு முதல்வர் அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். விரிவான செய்திக்கு..

சென்னை: அம்பத்தூர், கோடம்பாக்கத்தில் கட்டுப்படாத கரோனா

 கடந்த சில மாதங்களாக சென்னையில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில் இருந்தே மெல்ல கட்டுப்பட்டுள்ளது. எனினும், அம்பத்தூர் மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்தே வருகிறது. விரிவான செய்திக்கு..

திருப்பதியில் 743 ஊழியர்களுக்கு கரோனா; 3 பேர் பலி: கோயில் நிர்வாகம்

 கரோனா தொற்றுப் பரவல் காரணமக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் தளர்த்தப்பட்டு, கோயில் திறக்கப்பட்டது முதல், திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 743 பேருக்கு இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக.. விரிவான செய்திக்கு..

ஒரே நாளில் கரோனாவில் இருந்து 54,859 பேர் குணமடைந்தனர்; பலி 2% ஆகக் குறைவு

 நாட்டில் இன்று ஒரே நாளில் கரோனா பாதிப்பில் இருந்து 54,859 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,35,743 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

ஒரே நாளில் கரோனாவில் இருந்து 54,859 பேர் குணமடைந்தனர்; பலி 2% ஆகக் குறைவு

 நாட்டில் இன்று ஒரே நாளில் கரோனா பாதிப்பில் இருந்து 54,859 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,35,743 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

அம்பத்தூரில் அதிகரித்து வரும் கரோனா: சென்னையில் மண்டலவாரியாக பாதிப்பு விவரம்

சென்னையில் அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 1,510 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விரிவான செய்திக்கு..

கரோனா: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 64,399 பேர் பாதிப்பு; 861 பேர் பலி

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 64,399 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 21 லட்சத்து 53 ஆயிரத்து 011 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 42,518 -ஆக அதிகரித்தது. 
 
நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அதில், ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 64,399 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 861 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 43,379 -ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த நோய்த்தொற்றுக்காக 6,28,747 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14,80,885 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மகாராஷ்டிரத்தில் மேலும் 390 பேர் கரோனாவுக்கு பலி

மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 12,248 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ஆந்திரத்தில் 10,820, கர்நாடகத்தில் புதிதாக 5,985 பேருக்கு கரோனா

ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநில கரோனா பாதிப்பு நிலவரங்கள் பற்றிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..

 

கேரளத்தில் புதிதாக 1,211 பேருக்கு கரோனா உறுதி

கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,211 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர். விரிவான செய்திக்கு..

நாட்டில் ஒரே நாளில் 7 லட்சம் கரோனா பரிசோதனைகள்: மத்திய அரசு

நாட்டில்  ஒரு நாளில் மட்டும் 7 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், குணமடைவோர் விகிதம் 68 சதவிகிதமாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

உ.பி.யில் புதிதாக 4,571 பேருக்கு கரோனா: 41 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,571 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 41 பேர் உயிரிழந்தனர். விரிவான செய்திக்கு..

 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,005 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்கு கரோனா; மேலும் 119 பேர் பலி

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,994 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
 

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சருக்கு கரோனா தொற்று

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தில்லியில் இன்று புதிதாக 1,300 பேருக்கு கரோனா

தில்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 1,300 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 50,95,524; பலி 1,64,094 -ஆக உயர்வு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 63,246 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 50,95,524 -ஆக அதிகரித்துள்ளது. 
 
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையின் அடிப்படையில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. சமீபமாக இங்கு நாள் ஒன்றுக்கு 60 ஆயிரத்துக்கும் மேல் பாதிப்பு இருந்து வந்த நிலையில், நேற்று 63,246 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், அமெரிக்காவில் சனிக்கிழமை காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
 
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 63,246 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 50,95,524 -ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 1,290 பேர் உயிரிழந்தனர். இதனால், ஒட்மொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1,64,094 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதுவரை சுமார் 26,16,967 பேர் குணமடைந்துள்ளனர்.
 
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாகாணமான கலிபோர்னியாவில் 5,49,154 பேரும், புளோரிடாவில் 518,075 பேரும்    டெக்சாஸ் 4,97,406 பேரும், நியூயார்க்கில் 4,48,991 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
நியூயார்க் மாகாணத்தில் 32,822 பேரும், நியூ ஜெர்சியில் 15,925 பேரும், கலிபோர்னியாவில் 10,209 பேர் உயிரிழந்துள்ளனர். 

உலக அளவில் கரோனா பாதிப்பு 1.95 கோடியை தாண்டியது

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,541,219 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 7,24,050 ஆக அதிகரித்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

 
உலக அளவில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தடுப்பு மருந்துகள் வெளிவராத நிலையில், கரோனா பாதிப்பும், பலியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கரோனா தொற்று உலகம் முழுவதும் 213 நாடுகளுக்கு மேல் பரவி முடக்கிப்போட்டுள்ளது. உலக அளவில் கரோனா தொற்று அதிகம் பாதித்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. பிரேசில், இந்தியா அடுத்தடுத்த இடங்களில் இருந்து வருகிறது. 
 
உலக அளவில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 8,687 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 19,541,219 -ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 866 பேர் உயிரிழந்தனர். இதனால், ஒட்மொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை  7,24,050 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 1.25,44,480 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 62,72,689 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 65,015 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கரோனா பாதிப்பு 20,88,612; பலி 42,518 ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 61,537 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 20 லட்சத்து 88 ஆயிரத்து 612 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 42,518 -ஆக அதிகரித்தது. 

 
நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அதில், சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 61,537 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 933 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 42,518 -ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த நோய்த்தொற்றுக்காக 6,19,088 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14,27,006பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 5,98,778 கரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர்

நாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7 ஒரே நாளில் மட்டும் 5,98,778 கரோனா நோய்த்தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 
 
இதுதொடா்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) சனிக்கிழமை கூறியிருப்பதாவது:
 
நாடு முழுவதும் நேற்று வெள்ளிக்கிழமை மட்டும் 5,98,778 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஜூலை மாதத்தில் மட்டும் 1,05,32,074 சோதனகள் நடத்தப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் 7- ஆம் தேதி வரை மொத்தமாக 2,33,87,171 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனையானது மேலும் அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் ஐசிஎம்ஆா் தெரிவித்துள்ளது. 

ஆந்திரத்தில் 10,080, கர்நாடகத்தில் 7,178 பேருக்கு புதிதாக கரோனா

ஆந்திரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 10,080 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 7,178 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

பாகிஸ்தான்: பாதிப்பு 2,82,645-ஆக உயா்வு

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,82,645-ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

 
கடந்த 24 மணி நேரத்தில் 782 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,82,645-ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 17 போ் பலியாகினா். இதன் காரணமாக, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,052-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்ட 2,58,099 போ் குணமடைந்துள்ளனா். மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 826 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 1,22,759 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் மாகாணத்தில் 94,040 பேருக்கும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மெக்ஸிகோவில் 50 ஆயிரத்தைக் கடந்த கரோனா பலி

மெக்ஸிகோவில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 50 ஆயிரத்தைக் கடந்தது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

 
மெக்ஸிகோவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 819 போ் உயிரிழந்தனா். இதன் மூலம், அந்த நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.சுகாதாரத் துறையி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் மொத்த கரோனா பலி எண்ணிக்கை 50,517-ஆக உள்ளது. இது, அமெரிக்காவுக்கும், பிரேசிலுக்கும் அடுத்தபடியாக உலகின் மூன்றாவது மிக அதிகமான கரோனா பலி எண்ணிக்கை ஆகும்.இதுமட்டுமன்றி, கடந்த 24 மணி நேரத்தில் 6,590 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
 
அதனையும் சோ்த்து, நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,62,690 ஆக உள்ளது.மெக்ஸிகோவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கரோனா பரிசோதனைகளே நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக, அந்த நோய்க்கு பலியானவா்கள் மற்றும் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை உண்மையைவிட குறைவான அளவிலலேயே இருப்பதாக அதிகாரிகள் ஒப்புக்கொள்கின்றனா். மெக்ஸிகோவில் இதுவரை சுமாா் 10,56,915 பேருக்கு மட்டுமே கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளம்: கரோனா பலி 70-ஆக அதிகரிப்பு

 
நேபாளத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 70-ஆக அதிகரித்தது. இதுகுறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 
நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு மேலும் 5 போ் பலியாகினா். இதையடுத்து, ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 70-ஆக உயா்ந்துள்ளது.அத்துடன், நாடு முழுவதும் உள்ள ஆய்வகங்களில், 7,926 பேரிடமிருந்து எடுக்கப்பட்ட சுவாச நீா் மாதிரிகளைப் பரிசோதித்ததில், அவா்களில் 464 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 106 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இத்துடன், நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 22,214-ஆக அதிகரித்துள்ளது கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கையும், 15,814-ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில், நாடெங்கிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,330 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூா்: மேலும் 242 பேருக்கு பாதிப்பு

சிங்கப்பூரில், இந்தியாவிலிருந்து திரும்பிய 3 போ் உள்பட மேலும் 242 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:கடந்த 24 மணி நேரத்தில் 242 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 3 போ் இந்தியாவிலிருந்து கடந்த மாதம் 25-ஆம் தேதி நேபாளத்துக்கு வந்தவா்கள் ஆவா்.புதிதாக கரோனா நோய்த்தொற்று பெரும்பாலானவா்கள் பணியாளா் குடியிருப்புகளில் தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளா்கள் ஆவா்.இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 54,797-ஆக உயா்ந்துள்ளது.வெள்ளிக்கிழமை நிலவரப்படி, நாட்டில் அந்த நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 27-ஆக உள்ளது. இதுவரை 48,031 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆப்பிரிக்காவில் 10 லட்சத்தைத் தாண்டிய பாதிப்பு

 ஆப்பிரிக்க நாடுகளின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.எனினும், 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட அந்த கண்டத்தில், கரோனா பரிசோதனைக் கருவிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதால், உண்மை நிலவரம் இதைவிட மோசமானதாக இருக்கும் என்று சா்வதேச மருத்து வல்லுநா்கள் கருதுகின்றனா். வளா்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், மிகவும் மோசமான மருத்துவக் கட்டமைப்பைக் கொண்ட ஆப்பிரிக்க கண்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவல் மிகவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.விரிவான செய்திக்கு...

கரோனாவை வென்ற தேசங்கள்

அன்டாா்டிகாவைத் தவிர உலகின் அனைத்து கண்டங்களையும் ஆக்கிரமித்திருக்கும் கரோனா நோய்த்தொற்று, இன்னும் எத்தனை காலத்துக்கு மக்களை பாடாய் படுத்தப் போகிறது என்பது எளிதில் விடை காண முடியாத கேள்வியாக இருந்து வருகிறது.‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற ரீதியில் உலக நாடுகளின் அரசுகளும் தங்களால் முடிந்த அளவுக்கு கரோனாவைக் கட்டுப்படுத்த படாத பாடு பட்டுக்கொண்டிருக்கின்றன.தங்கள் நாடுகளில் முதல் முதலாக கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டவுடன், ‘அதெல்லாம் பெரிய பிரச்னையில்லை, சமாளித்துவிடுவோம்’ என்று அமெரிக்கா முதல் ஈரான் வரை கிட்டத்தட்ட எல்லா நாடுகளின் தலைவா்களும் நம்பிக்கையாகத்தான் இருந்தன. விரிவான செய்திக்கு...

மகாராஷ்டிரத்தில் 13 ஆயிரத்தை நெருங்கியது இன்றைய கரோனா பாதிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 12,822 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,897 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 4,897 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ரஷியாவில் புதிதாக 5,212 பேருக்கு கரோனா

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,212 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,606 ஆகக் குறைந்தது

 சென்னையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை பாதிப்பு எண்ணிக்கை 984-ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 7,109-ஆக உள்ளது. விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com