அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

கடலூரில் மேலும் 68 பேருக்கு தொற்று; கரோனா பாதிப்பு 228 ஆக உயர்ந்தது!

 கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் சென்ற மேலும் 68 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுவிரிவான செய்திக்கு..

வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காக நாள் ஒன்றுக்கு 40 ரயில்கள்: தெலங்கானா அரசு

 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஒரு வாரத்திற்கு நாள் ஒன்றுக்கு 40 ரயில்கள் இயக்கப்படும் என தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் கரோனா பரவல்: முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

சென்னையில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விரிவான செய்திக்கு..

ஆப்கானிஸ்தானில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்குகிறது

ஆப்கனில் அந்த வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,894ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் அந்நாட்டில் கரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 90ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிப்பில் இருந்து இதுவரை 345 பேர் குணமடைந்துள்ளனர். 

 

கரோனா: இந்தியாவில் பாதித்தோரின் எண்ணிக்கை 46,433-ஆக உயர்வு

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அந்த வைரஸால் 3900 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்துடன் நாட்டில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 42,836-லிருந்து 46,433-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 195 பேர் பலியாகியுள்ளனர். 

இத்துடன் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 1,389-லிருந்து 1,568-ஆக உயர்ந்துள்ளது.

கரோனா: இந்தியாவில் பாதித்தோரின் எண்ணிக்கை 46,433-ஆக உயர்வு

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அந்த வைரஸால் 3900 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்துடன் நாட்டில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 42,836-லிருந்து 46,433-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 195 பேர் பலியாகியுள்ளனர். 

இத்துடன் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 1,389-லிருந்து 1,568-ஆக உயர்ந்துள்ளது.

கரோனா: இந்தியாவில் பாதித்தோரின் எண்ணிக்கை 46,433-ஆக உயர்வு

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அந்த வைரஸால் 3900 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்துடன் நாட்டில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 42,836-லிருந்து 46,433-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 195 பேர் பலியாகியுள்ளனர். 

இத்துடன் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 1,389-லிருந்து 1,568-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 508 பேருக்கு கரோனா உறுதி

தமிழகத்தில் புதிதாக 508 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கரோனா பாதிப்பு 46,711; பலி 1,583 ஆக உயர்வு: மத்திய சுகாதாரத் துறை

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,711 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கோயம்பேடு சந்தையோடு தொடர்புடையவர்கள் பரிசோதனைக்கு தாமாக முன்வர வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை

 கோயம்பேடு சந்தையோடு தொடர்புடையவர்கள் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். விரிவான செய்திக்கு..

இந்த 11 நாடுகளில் இதுவரை கரோனாவின் சுவடே இல்லை

 உலக அளவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்தை எட்டிவிட்டது. சுமார் 2.50 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனர். 12 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். விரிவான செய்திக்கு..

ஊரடங்குக்குப் பிறகு மீண்டும் அலுவலகம் போகிறீர்களா? இதைக் கவனியுங்கள்

 கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சுமார் 40 நாட்களுக்குப் பிறகு, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விரிவான செய்திக்கு..

சென்னையில் மதுபானக் கடைகள் திறப்பு இல்லை: தமிழக அரசு

 சென்னை: சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் அதிகமாக இருப்பதால், மதுபானக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 357 ஆக உயர்வு

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,315 பேருக்கு தொற்று; மொத்த பாதிப்பு 21,051 ஆனது

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,315 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 21,501 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

கடந்த 24 மணி நேரத்தில் 3,900 பேர் பாதிப்பு; 195 பேர் பலி: மத்திய சுகாதாரத் துறை தகவல்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 3,900 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

சூரத் - பிரயாக்ராஜ்: கைக்குழந்தையுடன் 1,200 கி.மீ. நடந்து வந்த புலம்பெயர் பெண் தொழிலாளி

ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதி இல்லாமல் தனது கைக்குழந்தை மற்றும் உடைமைகளுடன் 1,200 கி.மீ. நடந்தே சொந்த ஊர் செல்கிறார் புலம்பெயர் பெண் தொழிலாளி. விரிவான செய்திக்கு..
 

கோயம்பேடு சந்தை - தமிழகத்தின் வூஹான்!

 ஓய்ந்ததுபோல கருதிக்கொண்டிருந்த நிலையில் ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. விரிவான செய்திக்கு..

சிங்கப்பூரில் மேலும் 632 பேருக்கு கரோனா; பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்குகிறது!

சிங்கப்பூரில் மேலும் 632 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார் தமிழக முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக மக்களுக்கு உரையாற்றுகிறார். விரிவான செய்திக்கு..
 

ரஷியாவில் ஒரேநாளில் 10,102 பேருக்கு தொற்று உறுதி

 ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,102 பேருக்கு தொற்று உறுதி செய்துள்ளதை அடுத்து, அங்கு கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,55,370 -ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

வெளிநாடுகளில் உள்ள 15,000 இந்தியர்களை மீட்க 64 சிறப்பு விமானங்கள்: மத்திய அரசு

மே 7 முதல் வெளிநாடுகளில் உள்ள சுமார் 15,000 இந்தியர்களை தாயகம் அழைத்துவர 64 விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.விரிவான செய்திக்கு..

கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்ற 107 பேருக்கு கரோனா தொற்று உறுதி

 கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் சென்ற 107 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தகவல் தெரிவித்தார். விரிவான செய்திக்கு..

புலம்பெயரும் தொழிலாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை: ரயில்வே விளக்கம்

புலம்பெயரும் தொழிலாளர்களிடம் இருந்து டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என ரயில்வே நிர்வாகம் விளக்கம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

திருவிக நகரில் 324; ராயபுரம் 275: சென்னையில் 1,458 பேருக்கு கரோனா

 திருவிக நகரில் 324, ராயபுரத்தில் 275 பேருக்கு கரோனா தொற்றுடன், சென்னையில் மட்டும் ஒட்டுமொத்தமாக 1,458 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.  விரிவான செய்திக்கு..

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் இரண்டு ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு

 சென்னை: சென்னையை அடுத்த மாதவரத்தில் இயங்கி வரும் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றி வந்த இரண்டு ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா பாதிப்பு: தினமும் 50 ஆயிரம் பரிசோதனைகள்; நிதி ஆயோக் உறுப்பினா் வி.கே.பால்

 கரோனா நோய்த் தொற்று பாதிப்பு தொடா்பாக நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என நிதி ஆயோக் உறுப்பினரும், கரோனா பாதிப்பை எதிா்கொள்வதற்கான திட்டத்தை வகுத்தல் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான அதிகாரக் குழுத் தலைவருமான வி.கே.பால் கூறினாா். விரிவான செய்திக்கு..

இந்தியாவில் 130 சிவப்பு மண்டலங்கள்

 கரோனா பாதிப்பு எண்ணிக்கை, இரட்டிப்பு விகிதம், பரிசோதனைகளின் எண்ணிக்கை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில், நாட்டிலுள்ள மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. விரிவான செய்திக்கு..

 சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவக பெண் ஊழியருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 42,533 ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42,533 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 1,373 பேர் பலியாகி உள்ளனர். 29,453 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,707 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக பாதிப்பு மகாராஷ்டிரத்தில் ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 12,974 பாதிக்கப்பட்ட நிலையில் 548 பலியாகியுள்ளனர். 

 

தமிழகத்தில் 190 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு; 12 வயதுக்குட்பட்டவர்கள்

தமிழகத்தில்  12 வயதுக்குட்பட்ட 190 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ஒரேநாளில் சென்னையில் 266 பேருக்கும், கடலூரில் 122 பேருக்கும் தொற்று உறுதி

சென்னையில் மட்டும் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 266 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத் துறை

 புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 83 பேர் மரணம் அடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கரோனா தொற்று உறுதி

​தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 527 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,074 பேர் குணமடைந்துள்ளனர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,074 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், 24 மணி நேரத்தில் குணமடைந்தோரில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் அம்மா உணவகங்களில் மே 17 வரை உணவு இலவசம்

சென்னையில் அம்மா உணவகங்களில் மே 17 வரை மூன்று வேளையும் உணவு இலவசமாக வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த காவல் துணை ஆணையருக்கு கரோனா பாதிப்பு

 சென்னை: சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த காவல் துணை ஆணையருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

நல்ல உணவு கொடுங்கள் போதும்: ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவப் பணியாளர்கள்

டேஹ்ராடூன்: நல்ல உணவு கொடுங்கள் என்று தனிமைப் படுத்தப்பட்டுள்ள ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விரிவான செய்திக்கு..

ஆமதாபாத்: குடும்பத்தினருடன் பேச கரோனா நோயாளிகளுக்கு விடியோ கால் வசதி

 ஆமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் தங்கள் குடும்பத்தினருடன் பேச விடியோ கால் வசதி செய்து தரப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சிங்கப்பூரில் சுமார் 4,800 இந்தியர்களுக்கு கரோனா பாதிப்பு

 சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய தொழிலாளர்களில் கடந்த ஏப்ரல் இறுதி வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 4,800 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதர் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியது!

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,083 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியருக்கு கரோனா

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனாவுக்குப் பலியான 2 ரூபாய் டாக்டர்: கர்னூல் மக்களின் பெருந்துயரம்

 ஆந்திரத்தில் இரண்டு ரூபாய் கட்டணத்திற்கு மருத்துவம் பார்த்து ஏழை மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு டாக்டரும்  கரோனா தொற்றுக்குப் பலியாகியிருக்கிறார். விரிவான செய்திக்கு..

கடும் வாகன நெரிசலை சந்தித்த தில்லி சாலைகள்: தளர்வுகள் இன்று அமலானது

 புது தில்லி: ஊரடங்கு காலத்தில் சில முக்கிய தளர்வுகள் இன்று தில்லியில் அமல்படுத்தப்பட்ட நிலையில், தில்லியின் முக்கியச் சாலையில் இன்று கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. விரிவான செய்திக்கு..

ஆந்திரத்தில் புதிதாக 67 பேருக்கு கரோனா: மொத்த எண்ணிக்கை 1650 ஆக உயர்வு

 ஆந்திர மாநிலத்தில் புதிதாக 67 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த மாநிலத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 1650 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com