
சிறப்புச் செய்திகள்
பரவும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்
கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!
சென்னையில் அம்மா உணவகத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கு கரோனா
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவக பெண் ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அம்மா உணவக ஊழியரை சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவருடன் பணி புரிந்தவர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரோனா தொற்று: பிற மாநிலங்கள் நிலவரம்
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை பல்வேறு மாநிலங்கள் வெளியிட்டுள்ளன. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்குகிறது
சீனா புதிதாக ஒருவருக்கு மட்டும் கரோனா தொற்று
கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் கரோனா நோய்த்தொற்று முதல் முதலாக பரவத் தொடங்கிய சீனாவில், கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டவா்களில் ஒரே ஒருவருக்கு மட்டுமே அந்த நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், அந்த நோய் பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 82,875-ஆக உள்ளது. அந்த நோய் பாதிப்பால் 4,633 போ் பலியாகியுள்ளனா்.
பாகிஸ்தான் அதிகபட்ச தினசரி பாதிப்பு
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு 1,297 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,114-ஆக அதிகரித்துள்ளது. பலியானவா்களின் எண்ணிக்கை 417-ஆக உயா்ந்துள்ளது. நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 4,715 போ் சிகிச்சைக்குப் பின் அந்த நோயிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
ஈரான்: மாா்ச் 10-க்குப் பிறகு குறைந்தபட்ச பாதிப்பு
கரோனா நோய்த்தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஈரானில், கடந்த மாா்ச் மாதம் 10-ஆம் தேதிக்குப் பிறகு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் தினசரி எண்ணிக்கை சனிக்கிழமை குறைந்தது. சனிக்கிழமை நிலவரப்படி, ஈரானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 96,448-ஆக உள்ளது. அவா்களில் 77,350 போ் சிகிச்சையில் குணமடைந்தனா்; 6,156 போ் உயிரிழந்தனா்.
தன்னைக் காப்பாற்றிய மருத்துவா்கள் பெயரை தன் குழந்தைக்குச் சூட்டிய போரிஸ் ஜான்ஸன்
பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸனுக்கும் அவரது துணைவி கேரி சீமண்ட்ஸுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவா்கள் இருவரும் புதன்கிழமை அறிவித்தனா். தாயும் சேயும் நலமுடன் உள்ளனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு 2,757 ஆக உயா்வு
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சனிக்கிழமை ஒரே நாளில் 231 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் புதிதாக 203 பேருக்கு தொற்று: மாவட்டவாரியாக விவரம்
சென்னையில் புதிதாக 203 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 40,263-ஆக உயர்வு
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,263-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1,306-ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10,887 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணநேரத்தில் புதிதாக 2487 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 83 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 266 பேருக்கு கரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் புதிதாக 266 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
மேற்கு வங்கத்தில் கரோனா பணியாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு ரூ.10 லட்சம் மருத்துவக் காப்பீடு
மேற்கு வங்கத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் கரோனா பணியாளர்களுக்கு ரூ. 10 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்குவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
உலகளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தைக் கடந்தது!
உலகளவில் கரோனா நோய்த்தொற்றுக்குப் பாதித்தோர் எண்ணிக்கை 35 லட்சத்தைக் கடந்துள்ளது. விரிவான செய்திக்கு..
நாசிக் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று
மகாராஷ்டிரத்தின் நாசிக் மாவட்டத்தில் இன்று மேலும் 27 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 360 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
அபுதாபியில் கரோனாவுக்கு சமூக சேவகர் பலி
ஐக்கிய அரபு நாடுகளில் அபுதாபியில் வசித்துவந்த சமூக சேவகரான பி.கே. கரீம் ஹாஜி (வயது 62), கரோனா நோய்த் தொற்று காரணமாகக் காலமானார். விரிவான செய்திக்கு..
ஆந்திரத்தில் மேலும் 58 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,583 ஆக உயர்வு
ஆந்திர மாநிலத்தில் மேலும் 58 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை திருவிக நகர் மண்டலத்தில் மேலும் 34 பேருக்கு தொற்று
சென்னை திருவிக நகர் மண்டலத்தில் மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சிங்கப்பூரில் மேலும் 657 பேருக்கு கரோனா உறுதி, பெரும்பாலானோர் வெளிநாட்டினர்!
சிங்கப்பூரில் மேலும் 657 பேருக்குக் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,205 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை அண்ணா சாலையில் மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதி
ஊரடங்கு தளர்வு நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
திருவிக நகரில் 290 பேருக்கு கரோனா பாதிப்பு; சென்னை மண்டல வாரியாக விவரம்
சென்னையில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,257 ஆக உயா்ந்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களின் பட்டியலில் தொடா்ந்து திருவிக நகர் முதல் இடத்தில் உள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் பாஸ் பெறுவது குறித்து இன்று விரிவான அறிவிப்பு: ஆணையர் பிரகாஷ்
சென்னை மாநகராட்சியில் பாஸ் பெறுவது பற்றி இன்று விரிவான அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
தில்லி சிஆர்பிஎஃப் தலைமை அலுவலகத்துக்கு சீல்
தில்லியில் உள்ள சிஆர்பிஎஃப் தலைமை அலுவலக ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை அசோக் நகரில் 11 பேருக்கு கரோனா உறுதி
சென்னையில் அசோக் நகரைச் சேர்ந்த 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ஹரியாணாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 421 ஆக உயர்வு
ஹரியாணாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 421 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
மது ஆலைகள் உற்பத்தி தொடங்க கர்நாடகம் அனுமதி
கர்நாடகத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்து, பிற பகுதிகளில் மது உற்பத்தி, வடிப்பாலைகள், ஒயின் தயாரிப்பாலைகள் உற்பத்தி தொடங்க மாநில அரசு அனுமதியளித்துள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் கரோனா பாதித்து 219 பேர் குணமடைந்தனர்
சென்னை: சென்னையில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1082-ஆக உயா்ந்துள்ள அதே சமயம், கரோனா பாதித்து சிகிச்சை பெற்று இதுவரை 219 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மருத்துவமனைகளில் 841 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 16 பேர் மரணம் அடைந்துவிட்டனர். விரிவான செய்திக்கு..
கால்விரல்கள் சிவப்பதும் கரோனாவின் அறிகுறியா?
கால் விரல்கள் சிவந்து காணப்படுவதும் கரோனாவுக்கான அறிகுறியாக இருக்கலாம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த தோல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரிவான செய்திக்கு..
ஆந்திரத்தில் 62 பேருக்கு கரோனா; மொத்த பாதிப்பு 1525 ஆனது
ஆந்திர மாநிலத்தில் புதிதாக 62 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த மாநிலத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 1525 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திரத்தில் இதுவரை கரோனா பாதித்து 33 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கரோனா பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே நல்லூர் கிராமத்தை சேர்ந்த 67 முதியவர் ஒருவர் ஆந்திரம் மாநிலத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்த நிலையில் அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒரே பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி தற்போது ஆரஞ்சு மண்டலமாக மாறியது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை கடந்தது: பலி 1218-ஆக உயர்வு
தில்லியில் ஒரே நாளில் 223 போ் புதிதாக பாதிப்பு
தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் வெள்ளிக்கிழமை 223 போ் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தில்லியில் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 3,738ஆக அதிகரித்துள்ளது. இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 61ஆக அதிகரித்துள்ளதாக தில்லி அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரஷியா: மீண்டும் அதிகபட்ச தினசரி பாதிப்பு
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா நோய்த்தொற்றால் 7,933 போ் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இது, அந்த நாட்டின் தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். இத்துடன், ரஷியாவில் பிரதமா் மிகயீல் மிஷுஸ்டின் உள்பட 114,431 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அவைத் தலைவருக்கு கரோனா தொற்று
சீனா அறிகுறிகள் இல்லாமல் 981 பேருக்கு தொற்று
சென்னையில் மேலும் 174 பேருக்கு கரோனா தொற்று: மாவட்டவாரியாக பட்டியல்
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளானோர் பற்றிய மாவட்டவாரியான பட்டியல் வெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 231 பேருக்கு கரோனா தொற்று
தமிழகத்தில் புதிதாக 231 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
தளர்வுகள் பற்றி தமிழக அரசு விளக்கம்
தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் பற்றி தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. விரிவான செய்திக்கு..
1 மாதத்துக்குப் பிறகு வயநாட்டில் புதிதாக ஒருவருக்கு நோய்த் தொற்று
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 1 மாதமாக கரோனா தொற்று இல்லாத நிலையில், இன்று (சனிக்கிழமை) புதிதாக ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
11.45 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை வாங்குகிறது மத்திய அரசு
புது தில்லி: உடனடியாக 11.45 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் வழங்க இரண்டு இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை மாநகர் பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள்
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து, சென்னை மாநகர் பகுதிகளுக்கு பிரத்யேகமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் தளர்வுகள் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மே 17 வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக முதல்வர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் மறு உத்தரவு வரும் வரை 11 செயல்பாடுகளுக்கு தடை நீடிக்கும்
கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு 598 ஆக அதிகரிப்பு
கர்நாடகத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 598 ஆக உயர்ந்துள்ளது.
பிகாரில் கரோனா பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
பிகாரில் 45 வயது நபர் கரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், அந்த மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 233 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்
சென்னையில் கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு மேலும் 31 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டதால், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஏப்ரல் 28ம் தேதி 202 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. விரிவான செய்திக்கு..
மே 17 வரை விமான சேவைகள் ரத்து: விமானப் போக்குவரத்துத் துறை
புது தில்லி: கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் மே 17 வரை உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை வேளச்சேரியில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் போராட்டம்
சென்னை: வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கி பணியாற்றி வந்த தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகளை செய்யுமாறு கூறி சென்னை வேளச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போபாலில் கரோனாவில் இருந்து மீண்ட 12 நாள் பச்சிளம் குழந்தை
போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தை, குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையிலும் இலவச சிகிச்சை
கோயம்பேடு காய்கறி சந்தையில் கரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு
தமிழகத்தின் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மாவட்டங்கள் (முழுப் பட்டியல்)
கரோனா நோய்த் தொற்று பாதிப்பின் அளவைப் பொருத்து, நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்தையும் நிறம் பிரித்து, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மாவட்டங்களாக மத்திய சுகாதாரத் துறை இன்று பட்டியல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
அகர்தலாவில், தமிழகத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு கரோனா பாதிப்பு
தமிழகத்தில் 12 சிவப்பு மாவட்டங்கள்; 24 ஆரஞ்சு மாவட்டங்கள்: மத்திய அரசு அறிவிப்பு
புது தில்லி: நாடு முழுக்க கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக பிரித்து மத்திய சுகாதாரத் துறை பட்டியல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திகள்..
கொல்லும் கரோனா, சாகும் மனிதாபிமானம்; வீதியில் இறந்துகிடந்த மனிதர்
கரோனாவால் உலகில் ஒருபக்கம் மனிதர்கள் இறந்துகொண்டிருக்கும் அதேவேளையில் இன்னொரு பக்கம் மனிதாபிமானமும் செத்துக்கொண்டிருக்கிறது. சென்னையில் 53 வயதான ஒருவருக்கு மரணம் வந்ததும் இறந்த பிறகும் அவருக்கு நேர்ந்த கொடுமைகளும் சொல்லி மாளாதவை. விரிவான செய்திக்கு..
தெலங்கானாவில் இருந்து ரயிலில் 1,200 தொழிலாளர்கள் ஜார்க்கண்ட் பயணம்
தெலங்கானாவில் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத் தொழிலாளர்கள் இன்று தங்களது சொந்த ஊருக்கு ரயிலில் புறப்பட்டுள்ளனர். விரிவான செய்திக்கு..
கரோனா தொற்றில் அதிகபட்ச பாதிப்பில் திருவிக நகர்; இரண்டாவது இடத்தில் ராயபுரம்
கரோனா தொற்று இல்லாத மாவட்டமானது தூத்துக்குடி
தூத்துக்குடியில் கரோனா வைரஸ் தொற்றால் 27 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 25 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடைசியாக சிகிச்சை பெற்றுவந்த பெண்ணும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். விரிவான செய்திக்கு..
கரோனா: தொற்று உறுதி செய்யப்பட்ட 98% பேருக்கு அறிகுறி இல்லை
சென்னையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 98 சதவீதம் பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.
38 பேருக்கு தொற்று: கரோனா மையமாக மாறிய கோயம்பேடு சந்தை: இனியாவது விதிமுறைகள் பின்பற்றப்படுமா?
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் ஏறத்தாழ ஒரு கோடி மக்களின் காய்கறித் தேவைகளை நிறைவு செய்து வரும் கோயம்பேடு சந்தை தற்போது கரோனா தொற்று மையமாக மாறியுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் ஒரே நாளில் 138 பேருக்கு கரோனா: மாநிலத்தில் 2,323 போ் பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் அந்த நோய்த்தொற்றுக்கு ஆளானவா்களின் எண்ணிக்கை 2,323-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகா் சென்னையில் கரோனா 906 பேருக்கு அந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிலும், வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 138 பேருக்கு கரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் தெரிய வந்தது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..
கேரள மாநிலத்தில் இன்று யாருக்கும் புதிதாக கரோனா தொற்று ஏற்படவில்லை: சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா
கேரளத்தில் இன்று யாருக்கும் புதிதாக கரோனா தொற்று ஏற்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார். அதேசமயம் இன்று 9 பேர் குணமடைந்துள்ளனர். இத்துடன் மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 392ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கேரளத்தில் கரோனாவுக்கு இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர்.
ஊரடங்கு: பொது இடங்களில், அலுவலகங்களில் கடைபிடிக்க வேண்டியவை
நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களைப் பொருத்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விரிவான செய்திக்கு..
ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்படும் போக்குவரத்துகள் விவரம்
நாடு முழுவதும் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களைப் பொருத்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விரிவான செய்திக்கு...
பச்சை நிற மண்டலங்களில் 50% பயணிகளுடன் பேருந்துகள் அனுமதி
பச்சை நிற மண்டலங்களில் 50% பயணிகளுடன் பேருந்துகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, மே 17 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீடிக்கப்படுகிறது. விரிவான செய்திக்கு....
நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு
நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு....
தமிழகத்தில் மேலும் 203 பேருக்கு கரோனா; பாதிப்பு 2,526 ஆக உயர்வு
தமிழகத்தில் புதிதாக 203 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனா பாதிப்பு 35,365; பலி 1,152 ஆக அதிகரிப்பு: மத்திய சுகாதாரத் துறை
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 35,365 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கடந்த 24 மணி நேரத்தில் 1,993 பேருக்கு கரோனா உறுதி: மத்திய சுகாதாரத் துறை
கடந்த 24 மணி நேரத்தில் 1,993 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
தில்லியில் மேலும் 12 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு கரோனா
தில்லியில் 31வது பாட்டலியன் பிரிவைச் சேர்ந்த மேலும் 12 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தோ-திபெத்திய எல்லை போலீஸார் 5 பேருக்கு கரோனா
தில்லியில் பணியாற்றி வந்த இந்தோ-திபெத்தியஎல்லை போலீஸார் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஒரே தெருவில் 19 பேருக்கு கரோனா
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஒரே தெருவில் வசிக்கும் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 16 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 19 பேருக்கு கரோனா பாதித்துள்ளது. விரிவான செய்திக்கு..
மே 3-க்குப் பிறகு கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள்: இடைக்கால அறிக்கை தாக்கல்
மே 3-ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் குறித்த இடைக்கால அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. விரிவான செய்திக்கு..
பிகாரில் கரோனா பாதிப்பு 450 ஆக உயர்வு
பிகார் மாநிலத்தில் கடந்த 12 மணி நேரத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார். விரிவான செய்திக்கு..
கரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள ஹோமியோபதி மருந்து!
கரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்க, உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 'ஆர்சனிக் ஆல்பம் 30' என்ற ஹோமியோபதி மருந்தை எடுத்துக்கொள்ள ஆயுஷ் மருத்துவத் துறையினர் பரிந்துரைக்கின்றனர். விரிவான செய்திக்கு..
கரோனாவை வென்றவர்கள்.. தெலங்கானாவில் 44 நாள் குழந்தை, திண்டுக்கல்லில் 95 வயது மூதாட்டி
கரோனா.. உலக நாடுகளை உலுக்கியிருக்கும் ஒற்றைச் சொல். ஏராளமான உயிர்களை பலிகொண்டு, பலரையும் இன்று மருத்துவமனையில் நோயாளிகளாக்கியுள்ளது. ஆனால், தெலங்கானாவில் 44 நாள் சிசுவும், திண்டுக்கல்லில் 95 வயது மூதாட்டியும் கரோனாவை வென்று அனைவருக்கும் நம்பிக்கையை அளித்துள்ளனர். விரிவான செய்திக்கு..
முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல், ரேஷன் பொருள்கள் இல்லை: கோவா அரசு அறிவிப்பு
முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல், ரேஷன் பொருள்கள் இல்லை என கோவா அரசு அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
பிளாஸ்மா சிகிச்சையால் ஒருவர் குணமடைந்தார்: கேஜரிவால் தகவல்
பிளாஸ்மா சிகிச்சையில் நல்ல முடிவுகள் வந்துள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை 306.42 கோடி நன்கொடை: தமிழக அரசு
சென்னை: கரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.306.42 கோடி நன்கொடையாகக் கிடைக்கப்பெற்றுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை: திருச்சி சிவா எம்.பி.

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.43 கோடி

கடும் வெயிலிலும் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டையில் வாக்களிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

