தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 93.44 ஆக நிறைவு!ஃபெட் வட்டி விகித உயர்வு அச்சம் எதிரொலி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவு!ரயில் பயணத்தில் உணவு ஆர்டர் செய்பவரா? இந்த 14 தளங்களை தவிர்த்திடுங்கள்! ஐஆர்சிடிசி அறிவுரைசோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!முதல்வர் விஜய் எதைப் பற்றி பேசியிருக்கிறார்? புதிதாகக் கேட்பதற்கு! காவிரி குறித்து ஸ்டாலின் பதில்தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கே தெரியாமல் திறந்த தவெகவினரால் பரபரப்பு!ராகுலின் தொலைபேசி அழைப்பு! மு.க. ஸ்டாலின் விளக்கம்கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு எப்படியிருக்கிறார்? தகவல் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு!திருவண்ணாமலை கார்த்திகை தீபம்! இலவச தரிசன டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!என்கவுன்டர் செய்யப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி லத்தீஃப் பட் யார்? அதிரவைக்கும் பின்னணிவேலைகளில் மட்டுமல்ல... தேர்வுகளிலும் மூக்கை நுழைக்கும் ஏஐ! ஸ்மார்ட் கண்ணாடி மூலம் மோசடி!தமிழ்நாட்டில் நாளை கனமழை பெய்யாது! மஞ்சள் எச்சரிக்கை வாபஸ்!அரக்கோணம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட நலத் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்பொங்கல் ரிடர்ன்! முடிந்தது ரயில் டிக்கெட் முன்பதிவு!உலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுரத்தில் நாளை (நவ. 19) இலவச அனுமதி!ஜம்மு - காஷ்மீர் மசூதிக்குள் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா தளபதி என்கவுன்டர்!வ.உ.சி.யின் கொள்கைகளைப் பின்பற்றி முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்! முதல்வர் விஜய்!செம்மஞ்சேரியில் ஒலிம்பிக் சிட்டி அமைக்க டெண்டர் வெளியீடு!தீவிரப் புயலாக வலுப்பெற்றது அக்வான்!ஜம்மு-காஷ்மீரில் மோதல்! லஷ்கர்-இ-தொய்பா தளபதியை சுற்றிவளைத்த இந்திய ராணுவம்!தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்

27 வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் புக்கோவ்ஸ்கி! பந்து தாக்கியதில் நிலைகுலைந்தவர்!

27 வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் புக்கோவ்ஸ்கி.

புக்கோவ்ஸ்கி..

Updated On :

கிரிக்கெட் போட்டியின் போது பந்து தாக்கியதில் நிலைகுலைந்த ஆஸ்திரேலிய அணி வீரர் வில் புக்கோவ்ஸ்கி, மூளையதிர்ச்சி காரணமாக தொடர்ந்து விளையாட முடியாத நிலையில் கிரிக்கெட்டில் இருந்து நிரந்தரமாக விடைபெற்றார்.

ஆஸ்திரேலியாவில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவந்த வில் புக்கோவ்ஸ்கி ஆஸ்திரேலிய அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்டார்.

விக்டோரியா அணிக்காக 2 இரட்டை சதங்கள் அடித்ததால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் புகோவ்ஸ்கி தேர்வு செய்யப்பட்டார். வில் புக்கோவ்ஸ்கி 2021 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் அறிமுகமானார்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தின்போது, இந்திய வீரர் கார்த்திக் தியாகி வீசிய பந்து வில் புக்கோவ்ஸ்கி தலையில் பயங்கரமாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மைதானத்தில் அப்படியே நிலைகுலைந்தார். இதையடுத்து அவருக்கு ஒன்பது கட்டங்களாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் கடந்தாண்டு மார்ச் மாதத்தில் ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடரில் மெரிடித் வீசிய பந்து வில் புக்கோவ்ஸ்கியின் தலையில் மீண்டும் தாக்கியது. இதில், பலத்த காயமடைந்தார். இதனால், மிகவும் பாதிக்கப்பட்ட வில் புக்கோவ்ஸ்கி பல்வேறு மருத்துவர்களின் ஆலோசனைபடி நிரந்தரமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இதுபற்றி 27 வயதான வில் புக்கோவ்ஸ்கி கூறுகையில், “பந்து தாக்கியதற்கு பின்னர் நடப்பதற்குகூட மிகவும் சிரமமாக இருந்தது. இதற்குபிறகு கிரிக்கெட்டில் இருந்து விளையாடுவதற்கு வாய்ப்பே இல்லை. இதனால், நான் தூங்கிக்கொண்டுதான் இருந்தேன்” என்றார்.

விக்டோரியா அணிக்காக 36 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள வில் புகோவ்ஸ்கி 45.19 சராசரியுடன் 7 சதங்கள் உள்பட 2,350 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 255* ரன்கள் குவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டில் தனது முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமான வில், ஆஸ்திரேலியாவில் பிரபலமான பிக் பாஷ் லீக்கில் விளையாடியிருந்தாலும், இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.