ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், அவரது தம்பி ஆகியோர் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலுக்கு குடும்பத்தினருடன் வருகை தந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து குலதெய்வம் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தனது மனைவி இறந்து ஒரு வருடம் ஆனதைத் தொடர்ந்து குலதெய்வ வழிபாட்டிற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தார்.
வெள்ளிக்கிழமை காலை தனது தம்பி ராஜா, மகன் பிரதீப், மருமகள் மற்றும் குடும்பத்தினருடன் ஸ்ரீ ஆண்டாள் கோயிலுக்கு வருகை தந்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து யானைக்கு காய்கறி வழங்கிய விட்டு ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் தனது குடும்பத்தினர் பேரில் சிறப்பு அர்ச்சனை செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பரிவட்டம் வழங்கப்பட்டது.
இதனையடுத்து குடும்பத்தினருடன் வெளியே வந்த ஓ. பன்னீர்செல்வம் தனது மனைவி இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் குலதெய்வம் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு வனப்பகுதியில் அமைந்துள்ள வனப்பேச்சி அம்மன் கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக மாவட்டச் செயலாளர்கள் கதிரவன், பாலகங்காதரன், தெய்வம் ஆகியோர் வரவேற்பு கொடுத்தனர். இதில் வழக்குரைஞர் கண்ணன், ராஜபாளையம் முருகையா பாண்டியன் மற்றும் கான்சாபுரம் கண்ணன், ராமகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க | நாகர்கோவிலில் ராகுலின் 3-ம் நாள் நடைப் பயணம் தொடங்கியது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா-பாகம் 2

தெய்வப்புலவர் திருவாய்மொழி (திருக்குறள் விளக்கவுரை)

வரப்பெற்றோம் (03-08-2026)

நெல்லையில் பூத்த சேனைக்கிழங்கு பூ! வியந்து பார்க்கும் மக்கள்!!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



