அக்.14-இல் மைசூரில் தசரா விழா தொடக்கம்
அக்.14-ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற தசரா விழா தொடங்க உள்ளது என கர்நாடக வருவாய்த் துறை அமைச்சர் சீனிவாஸ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
அக்.14-ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற தசரா விழா தொடங்க உள்ளது என கர்நாடக வருவாய்த் துறை அமைச்சர் சீனிவாஸ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மைசூரில் புகழ்பெற்ற தசரா ஊர்வலம் வரும் அக்.14-ஆம் தேதி சாமுண்டேஸ்வரிக்கு சிறப்பு பூஜை செய்து, தசரா விழா தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து, அக்.23-ஆம் தேதி விஜயதசமி தசரா ஊர்வலம் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டுகளில், தசரா ஊர்வலத்துக்காக ரூ.14 கோடி நிதி ஒதுக்குவது வாடிக்கையாக இருந்தது. தற்போது மாநிலத்தில் வறட்சி நிலவுவதால், அதனை ரூ.4 கோடியாகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
நிகழாண்டில் நடைபெறும் தசரா ஊர்வலத்தை, விவசாயி ஒருவரைக் கொண்டு தொடக்க முடிவு செய்துள்ளோம்.
தசரா விழாவையொட்டி, அரண்மனையில் அக்.14-ஆம் தேதி நடைபெறும் கலாசார விழாவை, முதல்வர் சித்தராமையா தொடக்கி வைப்பார்.
2 நாள்கள் நடைபெறும் கலாசார விழாவில், பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளும், காவல் துறையின் வாத்திய கோஷ்டிகளும் பங்கு பெறுகின்றன.
கலாசார நிகழ்ச்சிகளில், உள்ளூரைச் சேர்ந்த கலாசாரக் குழுக்கள் மட்டுமே பங்கேற்கின்றன. தசரா விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள குழு, துணைக் குழுக்களில், அதிகாரிகளும் இடம்பெற்றிருப்பார்கள் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.