FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கர்நாடக அமைச்சரவை  ஆகஸ்ட் 15-க்கு பின்னர் விரிவாக்கம்: தினேஷ் குண்டுராவ்

கர்நாடக அமைச்சரவை ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குப் பின்னர் விரிவாக்கம் செய்யப்படும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

கர்நாடக அமைச்சரவை ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குப் பின்னர் விரிவாக்கம் செய்யப்படும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் 34 பேர் கொண்ட அமைச்சரவையை அமைக்கலாம்.   இந்த வகையில், காங்கிரஸுக்கு 22, மஜதவுக்கு 12 அமைச்சர்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.  இதில், 16 இடங்களை காங்கிரஸும்,  11 இடங்களை மஜதவும் நிரப்பியுள்ளன.  மீதமுள்ள இடங்களை நிரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து தினேஷ் குண்டுராவ் கூறியது: -
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.  அமைச்சரவை விரிவாக்கம் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தியை  ஆகஸ்ட் 15-இல் சந்தித்து பேச இருக்கிறோம்.   இதன்பின்னர், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். 
நகர்ப்புற உள்ளாட்சித்  தேர்தலில் மஜதவுடன்கூட்டணி அமைப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments