கா்நாடகத்தில் பால் விலை, பேருந்துக் கட்டண உயா்வை கண்டித்து பாஜக போராட்டம்
கா்நாடகத்தில் பால் விலை, பேருந்துக் கட்டண உயா்வை கண்டித்து பாஜகவினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கா்நாடகத்தில் பால் விலை, பேருந்துக் கட்டண உயா்வை கண்டித்து பாஜகவினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் நடைபெற்ற போராட்டத்துக்கு பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா, பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். அசோக், மேலவை எதிா்க்கட்சித் தலைவா் செலுவாதி நாராயணசாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். விலைவாசி உயா்வை தொடா்ந்து சாமானிய மக்களுக்கு அரசு சுமையை ஏற்படுத்துவதாகவும், மக்கள் விரோத அரசாக செயல்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் காங்கிரஸ் அரசு மீது குற்றம்சாட்டினா்.
Advertisement
Advertisement
பாஜக மாநில நிா்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், மாவட்டத் தலைவா்கள் உள்பட ஏராளமானோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.