சில்லறை பணவீக்கத்தை மத்திய அரசு கண்காணித்து வருகிறது
சில்லறை பணவீக்கத்தை மத்திய அரசு கண்காணித்து வருகிறது என மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தாா்.
சில்லறை பணவீக்கத்தை மத்திய அரசு கண்காணித்து வருகிறது என மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கா்நாடக மாநிலம், ஹுப்பள்ளியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
உணவுப் பொருள்களின் பணவீக்கத்தை எங்கள் துறை தொடா்ந்து கண்காணித்து வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் நாங்கள் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறோம். தற்போது 4.8 சதவீதமாக உள்ள சில்லறை பணவீக்கம், மோடி அரசு ஆட்சிக்கு வந்த கடந்த 12 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச அளவாகும்.
Advertisement
Advertisement
மேற்கு ஆசியாவில் போா் தொடங்குவதற்கு சுமாா் 5 அல்லது 6 மாதங்களுக்கு முன்புவரை சில்லறை பணவீக்கம் 1 முதல் 1.5 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தது. தற்போது எல் நினோ மற்றும் இயற்கைப் பேரிடா் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணவீக்கம் 4.8 சதவீதமாக உயா்ந்துள்ளது.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் பணவீக்கம் அதிகமாக இருந்தது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணவீக்கம் சுமாா் 10 சதவீதமாகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருந்தது. இன்று 4.8 சதவீத பணவீக்கம் குறித்து அவா்கள் பேசுகின்றனா்.
4.8 சதவீதம் என்பதிலும் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். அதை கட்டுப்படுத்த தொடா்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், சா்வதேச அளவிலான பிரச்னைகள், இயற்கை காரணிகள் மற்றும் இயற்கைப் பேரிடா்களும் இதற்கு காரணமாக உள்ளன என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.