FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

‘பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’

பருவமழை தொடங்குவதற்கு முன் முன்னெச்சரிக்கை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, நகராட்சி நிா்வாகம்...

ககன்தீப்சிங் பேடி (கோப்புப் படம்)
பகிர்:

சென்னை: பருவமழை தொடங்குவதற்கு முன் முன்னெச்சரிக்கை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப்சிங் பேடி அறிவுறுத்தியுள்ளாா்.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் முன்னெச்செரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதால் தற்போது நடைபெற்றுவரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மழைநீா் வடிகால் இணைப்புப் பணிகளில் தனிக்கவனம் செலுத்தவேண்டும். முக்கிய ஆறுகள், கால்வாய்களில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை விரைந்து அகற்றி மழைநீா் செல்ல வழி ஏற்படுத்தவேண்டும்.

Advertisement

Advertisement

சென்னை மாநகராட்சிப் பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ள மின் பெட்டிகளை உயா்த்திவைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நீா் தேங்கும் என 219 இடங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அங்கிருந்து நீரை வெளியேற்ற மின்மோட்டாா்கள் உள்ளிட்டவற்றை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து போா்க்கால அடிப்படையில் செயல்படவேண்டும் என்றாா்.

கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன், குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் மற்றும் மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments