காலமானார் பால் துரைசிங்கம்
சென்னை, ஜன.26: திரைப்பட எடிட்டர் பால் துரைசிங்கம்(79) சென்னையில் வியாழக்கிழமை மாரடைப்பால் காலமானார். தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்கள் என மொத்தம் 150 படங்களில் எடிட்டராக பணியாற்றி உள்ள இவருக்கு மனை
சென்னை, ஜன.26: திரைப்பட எடிட்டர் பால் துரைசிங்கம்(79) சென்னையில் வியாழக்கிழமை மாரடைப்பால் காலமானார்.
தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்கள் என மொத்தம் 150 படங்களில் எடிட்டராக பணியாற்றி உள்ள இவருக்கு மனைவி ஜாய்(70), மகன் ஆண்டர்சன் (48) ஆகியோர் உள்ளனர்.
பிரபல திரைப்பட இயக்குநர்களான பீம்சிங், மகேந்திரன், திருமலை மகாலிங்கம் ஆகியோரின் திரைப்படங்களில் எடிட்டராகப் பணியாற்றி உள்ளார்.
Advertisement
Advertisement
சென்னை அண்ணாநகர், சாந்தோம் காலனியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைத் துறையினர் அஞ்சலி செலுத்தினர். அண்ணாநகரில் உள்ள தேவாலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.