FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வட மாநில இளைஞர் கல்லால் அடித்துக் கொலை

சென்னை பள்ளிக்கரணை அருகே வட மாநில இளைஞர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:


சென்னை பள்ளிக்கரணை அருகே வட மாநில இளைஞர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 பள்ளிக்கரணை அருகே பெரும்பாக்கம் நூக்கம்பாளையம் காந்தி தெருவில் திங்கள்கிழமை காலை அடையாளம் தெரியாத ஒரு இளைஞர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள், பள்ளிக்கரணை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
 போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் இறந்தவர் 22 வயது மதிக்கத்தக்கவர் என்பதும், வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. ஆனால் அவர் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? போன்ற தகவல்கள் போலீஸாருக்கு உடனடியாகத் தெரியவில்லை.
 இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments