FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காலமானார் வழக்குரைஞர் பு.ஆ. தெய்வசிகாமணி

சுதந்திரப் போராட்ட தியாகி சர்தார் ஆதிகேசவலு நாயக்கரின் மகனும், வழக்குரைஞருமான பு.ஆ.தெய்வசிகாமணி (76) சென்னையில் வியாழக்கிழமை (செப்.24) காலமானார்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

சுதந்திரப் போராட்ட தியாகி சர்தார் ஆதிகேசவலு நாயக்கரின் மகனும், வழக்குரைஞருமான பு.ஆ.தெய்வசிகாமணி (76) சென்னையில் வியாழக்கிழமை (செப்.24) காலமானார்.

இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். மணிமேகலை சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினராகவும், லியோ மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதல்வராகவும் இருந்தார்.

மறைந்த தெய்வசிகாமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளார். நோட்டரி வழக்குரைஞராக 36 ஆண்டுகள் இருந்துள்ளார்.

Advertisement

Advertisement

சிறைக்குச் சென்று வந்த கைதிகளின் நலனுக்காக நடத்தப்பட்ட அமைப்பு, காசநோய் தடுப்பு இயக்கம், பாரத சாரண-சாரணியர் இயக்கம் ஆகியவை உள்பட பல்வேறு அமைப்புகளில் பொறுப்பு வகித்துள்ளார். இவரது சேவையைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் இவருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளன.

மறைந்த தெய்வசிகாமணியின் இறுதிச் சடங்குகள் சென்னை அண்ணாநகர் மின்மயானத்தில் வெள்ளிக்கிழமை (செப்.25) நடைபெற்றது. தொடர்புக்கு: 9840150930. தெய்வசிகாமணியின் தந்தை சர்தார் ஆதிகேசவலு நாயக்கர் சுதந்திரத்துக்காகப் போராடி பல முறை சிறை சென்றுள்ளார்.

நாட்டுக்காக தனது சொத்துகள் பலவற்றை தியாகம் செய்துள்ளார். அன்றைய கால கட்டத்தில் காந்தி, நேரு போன்ற தலைவர்கள் சென்னைக்கு வந்தபோது நேரில் சென்று அவர்களுக்கு வரவேற்பு அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments