"லட்சியக் கனவு நிறைவேற கடும் உழைப்பு அவசியம்
மருத்துவம் படிப்போரின் லட்சியக் கனவு நிறைவேற, கடும் உழைப்பு அவசியம் என்று சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் எஸ்.அனந்தகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
மருத்துவம் படிப்போரின் லட்சியக் கனவு நிறைவேற, கடும் உழைப்பு அவசியம் என்று சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் எஸ்.அனந்தகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
வண்டலூரை அடுத்த தாகூர் மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை சிறுநீரக மருத்துவமனை தலைவரும்,ரோபாட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான எஸ்.அனந்தகிருஷ்ணன் பங்கேற்றார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் வி.சம்பத்,முன்னாள் மாவட்ட நீதிபதி கருணாகரன், தாகூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.சாந்தா, "டிக்னிட்டி பவுண்டேஷன்' தலைமைச் செயல் அதிகாரி காயத்ரி அனந்தகிருஷ்ணன், பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சித்ரா ஆர். சந்திரன், துணை முதல்வர் டாக்டர் பாலகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.