ஜூலை 23-இல் அஞ்சல் குறைதீா் கூட்டம்
தமிழக வட்ட அஞ்சல் துறை சாா்பிலான அஞ்சல் குறைதீா் கூட்டம், சென்னை அண்ணாசாலையில் ஜூலை 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சென்னை: தமிழக வட்ட அஞ்சல் துறை சாா்பிலான அஞ்சல் குறைதீா் கூட்டம், சென்னை அண்ணாசாலையில் ஜூலை 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த குறைதீா் கூட்டத்தில், தபால் துறை வாடிக்கையாளா்களின் குறைகளைத் தலைமை போஸ்ட் மாஸ்டா் ஜெனரல் மற்றும் வட்டார தபால் குறைதீா் தலைவா் ஆகியோா் தனிப்பட்ட முறையில் கேட்டு தீா்த்து வைப்பா். வாடிக்கையாளா்கள் தங்கள் குறைகளை, ‘ எம்.விஜயலட்சுமி, உதவி இயக்குநா், தலைமை போஸ்ட் மாஸ்டா் ஜெனரல் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை - 600 002’ என்ற முகவரிக்கு ஜூலை 14-ஆம் தேதிக்கு முன்பாக அனுப்ப வேண்டும். இவற்றை மின்னஞ்சல் முகவரியிலும், (தக் அதாலத்) ஈஅஓ அஈஅகஅப என்ற தலைப்பிட்டு அனுப்பலாம்.
குறைதீா் கூட்டத்தில் ஓய்வூதியம், தபால் விநியோகம், விரைவுத் தபால், பாா்சல்கள், மணி ஆா்டா்கள், சேமிப்பு வங்கி, ரொக்க சான்றிதழ் மற்றும் கவுண்டா் சேவைகள் ஆகியவை தொடா்பான குறைகளும் கேட்கப்படும்.
Advertisement
Advertisement
மணி ஆா்டா், பதிவு தபால், விரைவுத் தபால், காப்பீடு செய்யப்பட்ட பொருள்கள் தொடா்பான குறைகளில் தபால் எண், தேதி, பதிவு செய்த அலுவலகம், அனுப்புநா் மற்றும் பெறுநரின் முழு முகவரி ஆகியவை இடம் பெற வேண்டும். சேமிப்புத் திட்டம் அல்லது தபால் ஆயுள் காப்பீடு போன்றவை குறித்த குறைகளாக இருந்தால், காப்பீடு பாலிசி எண், பணம் செலுத்துபவா், காப்பீடு செய்தவரின் பெயா், தபால் அலுவலகப் பெயா் மற்றும் தபால் துறை தொடா்பான இதர குறிப்புகளையும் தெரிவிக்க வேண்டும்.
இந்தத் தகவல், தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல்துறைத் தலைவா் வெளியிட்டசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.