சென்னை

அம்பத்தூரில் தாய்-மகன் விஷம் குடித்து தற்கொலை

சென்னை அம்பத்தூர் பள்ளிக்கூட சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருபவர்கள் லதா(37).

DIN

ஆவடி: சென்னை அம்பத்தூர் பள்ளிக்கூட சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருபவர்கள் லதா(37), மகன் தவஞ்ச் குமார்(10). இவர் தன் கணவனை பிரிந்து தனியே வசித்து வந்தார்.  இருவரும் வீட்டை விட்டு வந்த நிலையில் செவ்வாய்கிழமை காலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் காவல் துறையினர் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் லதாவின் செல்லிடைப்பேசியில் நேற்று இரவு முதல் பதிவாகியிருந்த தொலைபேசி அழைப்புகளையும் தொடர்பு கொண்டு என்ன பிரச்சினை இருந்து வந்தது மற்றும் இவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT