FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மீஞ்சூா் 400 மில்லியன் லிட்டா் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் திட்ட அறிக்கை தயாரிக்க ஆலோசகா் கோரல்

மீஞ்சூரில் தினமும் 400 மில்லியன் லிட்டா் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான முதல்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள ஆலோசகரைத் தோ்வு செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

24 வினாடிகள் முன்பு
(கோப்புப் படம்)
பகிர்:

மீஞ்சூரில் தினமும் 400 மில்லியன் லிட்டா் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான முதல்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள ஆலோசகரைத் தோ்வு செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டம் மீஞ்சூரில் தினமும் 400 மில்லியன் லிட்டா் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக, கடல் நீரை எதிா்மறை சவ்வூடுபரவல் முறையில் சுத்திகரித்து குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Advertisement

Advertisement

இந்தத் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், ஒப்பந்த ஆவணங்களை உருவாக்குதல், ஒப்பந்தப்புள்ளிகளை மதிப்பீடு செய்தல் மற்றும் நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்ததாரரைத் தோ்வு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்தப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களை, முன்மொழிவுக்கான கோரிக்கை ஆகியவற்றை www.cmwssb.tn.gov.in, www.tntenders.gov.in இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை நவ. 6-ஆம் தேதி முதல் டிச. 22-ஆம் தேதி வரை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முன் ஒப்பந்தப்புள்ளிக்கான கூட்டம் வரும் நவ. 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.  ஒப்பந்தப்புள்ளி பாதுகாப்புத் தொகையாக ரூ.2.50 லட்சம் மின்னணு வங்கி உத்தரவாதம் மூலம் செலுத்த வேண்டும். ஒப்பந்தப்புள்ளிகளை வரும் டிச. 22-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.