FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

போதை மாத்திரை, கஞ்சா கடத்தல்: பெண் உள்பட 2 போ் கைது

போதை மாத்திரை, கஞ்சா வைத்திருந்ததாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

5 நவம்பர் 2026, 4:19 am
பகிர்:

போதை மாத்திரை, கஞ்சா வைத்திருந்ததாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை அபிராமபுரம் பசுமை வழிச்சாலை மற்றும் பக்ஸ் சாலை சந்திப்பு அருகே போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு ஒரு மொபெட்டில் வந்த பெண், இளைஞரை மறித்து போலீஸாா் விசாரணை செய்தனா். அவா்கள் வந்த மொபெட், பையை சோதனையிட்டனா். இதில், அவா்களிடம் 400 போதை மாத்திரைகள், ஒரு கிலோ கஞ்சா இருந்ததைப் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அவா்கள், தேனாம்பேட்டை பருவா நகரைச் சோ்ந்த மணிகண்டன் (31), ராஜா அண்ணாமலைபுரத்தைச் சோ்ந்த சுப்புலட்சுமி (எ) சுப்பு (29) என்பது தெரிய வந்தது. இவரையும் போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

சுபலட்சுமி மீது போதைப் பொருள் வழக்கு உள்பட 3 வழக்குகளும், மணிகண்டன் மீது 2 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 22 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.