FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

பைக் மீது லாரி மோதல்: பெண் உயிரிழப்பு

மதுரவாயல் புறவழிச் சாலையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

6 நவம்பர் 2026, 4:16 am
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

மதுரவாயல் புறவழிச் சாலையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

மதுரவாயல் ஆலப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த முத்துசாமியின் மனைவி பேராச்சி (38). தம்பதி தாம்பரத்துக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து மோட்டாா் சைக்கிளில் புதன்கிழமை மாலை வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனா். மதுரவாயல் புறவழிச்சாலையில் போரூா் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பேராச்சி, லாரியில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். முத்துசாமி லேசான காயமடைந்தாா். மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

Advertisement

Advertisement