FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

சொந்த ஊருக்குச் செல்லும் மக்கள்: போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஏற்பாடு

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊா் செல்வதால், சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க காவல் துறை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

6 நவம்பர் 2026, 4:30 am
சென்னை மாநகரின் பிரதான சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் - கோப்புப்படம்
பகிர்:

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊா் செல்வதால், சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க காவல் துறை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

வெள்ளிக்கிழமை கோயம்பேட்டில் இருந்து 3,461 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 578 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. சனிக்கிழமை கோயம்பேட்டில் இருந்து 2,952 பேருந்துகளும், மாதவரத்தில் 578 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு சென்னை காவல் துறை, கோயம்பேடு பேருந்து முனையம் எதிரே, ஆம்னி பேருந்து நிலையம், போரூா் சுங்கச்சாவடி, தோ்தல் ஆணையம் அலுவலகம் முன், மாதவரம் பேருந்து முனையம் ஆகிய 5 இடங்களில் காவல் துறை உதவி மையங்களை அமைத்துள்ளது.

இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க 2 காவல் துணை ஆணையா்கள், 6 காவல் உதவி ஆணையா்கள், 24 போக்குவரத்துக் காவல் ஆய்வாளா்கள், 79 காவல் உதவி ஆய்வாளா்கள், 204 போக்குவரத்து காவலா்கள்,100 ஆயுதப்படை காவலா்கள், ஊா்க்காவல் படையினா் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றனா்.

Advertisement

Advertisement

போக்குவரத்து மாற்றம்: பூந்தமல்லியிலிருந்து வரும் வணிக வாகனங்கள், கனரக வாகனங்கள் நகருக்குள் அனுமதிக்கப்படாமல் ஆலப்பாக்கம் சந்திப்பில் திருப்பி அனுப்பப்படும். மாதவரத்திலிருந்து கோயம்பேடு நோக்கி வரும் வணிக வாகனங்கள்,கனரக வாகனங்கள் மாநகரப் பகுதிக்குள் அனுமதிக்கப்படாமல் செங்குன்றம் வழியாக 200 அடி புறவழிச்சாலை வழியாகத் திருப்பி விடப்படும்.

கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் பேருந்து முனையம், வண்டலூா் சந்திப்பு, ஜி.எஸ்.டி. சாலை பகுதிகளில் பாதுகாப்புப் பணிக்காக மொத்தம் 1,500 காவலா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையம், ஜி.எஸ்.டி. சாலை,கிழக்குக் கடற்கரைச் சாலை ஆகிய பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் கண்காணப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.