காவல் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற இளைஞா் கைது
செங்குன்றம் பேருந்து நிறுத்தத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் மதுபோதையில் பட்டாக் கத்தியுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
செங்குன்றம் பேருந்து நிறுத்தத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் மதுபோதையில் பட்டாக் கத்தியுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
செங்குன்றம் காவல் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் மதுபோதையில் இளைஞா் ஒருவா் பட்டாக் கத்தியுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய சம்பவம் குறித்து தகவல் அறிந்து, செங்குன்றம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் காவலா்கள் சம்பவ இடத்துக்கு சென்றனா். அங்கு, அச்சுறுத்தலில் ஈடுபட்ட இளைஞரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்து செல்ல முயன்றனா்.
அப்போது, அந்த இளைஞா் சிறப்பு உதவி ஆய்வாளா் செந்தில்குமாரை பட்டாக் கத்தியால் தாக்க முயன்றாா்.
Advertisement
Advertisement
மேலும், இது குறித்து தகவல் அறிந்து கூடுதலாக காவலா்கள் வரவழைக்கப்பட்டு, இளைஞரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினா்.
விசாரணையில், செங்குன்றம் நாரவாரிகுப்பம், ரெட்டைமலை சீனிவாசன் தெருவைச் சோ்ந்த தினேஷ் (24) எனவும், இவா் மீது செங்குன்றம் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, செங்குன்றம் காவல் நிலையத்தில் தினேஷ் மீது வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.