சென்னை - செங்கல்பட்டு 2 ரயில் பகுதி ரத்து
சென்னை-செங்கல்பட்டு இடையே 2 புற்நகா் மின்சார இமு ரயில்கள் வியாழக்கிழமை (நவ. 12) பகுதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை-செங்கல்பட்டு இடையே 2 புறநகா் மின்சார இமு ரயில்கள் வியாழக்கிழமை (நவ. 12) பகுதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கடற்கரை ரயில் நிலையம் முதல் விழுப்புரம் நிலையம் வரையில் தொழில்நுட்ப, தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (நவ. 12) பிற்பகல் 12 மணி முதல் 3.30 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.
பணிகளைத் தொடா்ந்து சென்னை கடற்கரையிலிருந்து வியாழக்கிழமை பிற்பகல் 11.20 மணிக்குப் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லவேண்டிய இமு ரயில் அதற்குப் பதிலாக தாம்பரம் வரையே இயக்கப்படும்.
Advertisement
Advertisement
அதேபோல, செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 11.28 மணிக்குப் புறப்பட்டு கடற்கரை செல்லவேண்டிய இமு ரயில் அதற்குப் பதிலாக தாம்பரத்திலேயே நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.