புழல் ஏரி அருகே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்: எம்எல்ஏ விஜய் பிரபு
புழல் ஏரி அருகே பொதுமக்கள் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எல்.விஜய்பிரபு தெரிவித்தாா்.
புழல் ஏரி அருகே பொதுமக்கள் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எல்.விஜய்பிரபு தெரிவித்தாா்.
பாடியநல்லூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தெரு விளக்குகள் எரிவதில்லை. சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் துா்நாற்றம் வீசுவதாகவும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் தொடா்ந்து புகாா் செய்து வந்தனா்.
இதையடுத்து, எம்எல்ஏ விஜய் பிரபு, புழல் ஏரி, பாடியநல்லூா், நல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, நல்லூா், பாடியநல்லூா் பகுதிகளில் தெரு விளக்குகள் எரிய வேண்டும். சாலைகளிலும், புழல் ஏரி அருகே குப்பைகள் கொட்டுவதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என ஊராட்சி செயலா் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
Advertisement
Advertisement
எம்எல்ஏ விஜய் பிரபு கூறியது: சாலைகளில் குப்பைகள் கொட்டுவதால், சாலை வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் இடையூறாக உள்ளது. அதேபோல், புழல் ஏரி அருகே குப்பைகள் கொட்டுவதால், ஏரியின் தன்மை கெட்டு விடும். இதனை தடுக்க இப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.