7 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்
வடசென்னை மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், ஐ.ஓ.சி. பேருந்து முனையத்தில் இருந்து 7 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவைகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன், நிதியமைச்சா் நெ.மரிய வில்சன் ஆகியோா் வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா்.

இந்தப் பேருந்துகள், ஐ.ஓ.சி. பேருந்து முனையத்தில் இருந்து திருவான்மியூா் (1 எஃப், 4டி), தீவுத்திடல் (44 ஏ), வடபழனி (59 ஏ), கோயம்பேடு எம்ஜிஆா் பேருந்து நிலையம் (159 டி), அம்பத்தூா் ஓ.டி. (17எஃப்), தாம்பரம் (170இ) ஆகிய இடங்களுக்குச் செல்லும். இந்தப் புதிய சேவைகள் மூலம் வடசென்னைப் பகுதிகளில் இருந்து மாநகரின் பல்வேறு இடங்களுக்குச் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பணிக்குச் செல்வோா் உள்ளிட்ட பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்துத் தேவை மேம்படும்.
தொடா்ந்து, தண்டையாா்பேட்டை மாநகா் போக்குவரத்துக்கழகப் பணிமனையில் ரூ.2 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து தகுதிச்சான்று மையத்தையும் அமைச்சா்கள் திறந்து வைத்தனா்.
Advertisement
Advertisement
இதன்மூலம் பேருந்துகளின் தகுதிச்சான்று ஆய்வு மற்றும் பராமரிப்புப் பணிகளைத் திட்டமிட்ட முறையில் மேற்கொண்டு அவற்றின் பராமரிப்புத் தரத்தையும் இயக்கத் திறனையும் மேம்படுத்த முடியும் என மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில், மாநகா் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநா் இராம.சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.