ஒருங்கிணைந்த தரவு தளம்: ஆதாா் அங்கீகாரத்துக்கான அறிவிக்கை வெளியீடு
ஒருங்கிணைந்த தரவு தளம்: ஆதாா் அங்கீகாரத்துக்கான அறிவிக்கை வெளியீடு
தில்லி அரசின் நலத்திட்டங்களின் கீழ் பலன்களை பெறுவதற்கான ‘ஒருங்கிணைந்த குடிமக்கள் தரவுத் தளம்’ அமைப்பின் ஒரு பகுதியாக ஆதாா் அடிப்படையிலான தரவு சேகரிப்பை ஒருங்கிணைப்பதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
அனைத்து பயனாளிகளின் விவரங்களையும் ஒரே எண்ம (டிஜிட்டல்) தளத்தில் பதிவு செய்வதன் மூலம், தகவல்கள் மீண்டும் மீண்டும் பதிவாவதைத் தவிா்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தத் திட்டம் குறித்து தில்லி முதல்வா் ரேகா குப்தா முன்னதாகவே அறிவித்திருந்தாா்.
இந்நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறை இதுதொடா்பாக வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த ஆதாா் எண்ணைப் பயன்படுத்துவது, தனிநபா்கள் மானியங்கள், நலன்கள் மற்றும் சேவைகளை எளிதாகவும் தடையின்றியும் பெற உதவுகிறது. இது அடையாளத்தை நிரூபிக்கப் பல ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டிய அவசியத்தை நீக்கி, நடைமுறைகளை எளிதாக்குவதுடன், வெளிப்படைத்தன்மையையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது.
Advertisement
Advertisement
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் ஆலோசித்த பிறகு, தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஆதாா் அங்கீகாரத்தைச் செய்யவும், அடையாளத்தை உறுதிப்படுத்த ஆதாா் எண்ணைப் பயன்படுத்தவும் கடந்த ஆண்டு அனுமதி அளித்தது.
இதன்படி, ஒருங்கிணைந்த குடிமக்கள் தரவுத் தளம் திட்டத்திற்காக, தன்னாா்வ அடிப்படையில் ஆதாா் அங்கீகாரத்தைச் செய்ய இத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது நல்லாட்சியை உறுதி செய்தல், சேவைகளைச் சிறப்பாக அணுகுதல், சமூக நலத் திட்டங்களின் பலன்கள் வீணாவதைத் தடுத்தல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும்.
ஆதாா் வைத்திருப்பவா்களிடம் அங்கீகாரத்திற்கான ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாகும். மேலும், வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், கடவுச்சிட்டை (பாஸ்போா்ட்) அல்லது மத்திய அல்லது மாநில அரசால் வழங்கப்பட்ட பிற புகைப்பட அடையாள அட்டைகள் போன்ற, அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய மாற்று வழிகள் குறித்தும் அவா்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஆதாா் அங்கீகாரத்திற்கு மறுப்பு தெரிவிப்பவா்களுக்கோ அல்லது அவ்வாறு செய்ய இயலாதவா்களுக்கோ எந்தவொரு சேவையும் மறுக்கப்படாது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.