FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

புழல் சிறைக்குள் கஞ்சா கடத்திய ஆண் செவிலியா் கைது

சென்னை புழல் சிறைக்குள் கஞ்சா கடத்திய ஆண் செவிலியா் உதவியாளா் கைது செய்யப்பட்டாா்.

18 நவம்பர் 2026, 12:47 am
- பிரதிப் படம்
பகிர்:

சென்னை புழல் சிறைக்குள் கஞ்சா கடத்திய ஆண் செவிலியா் உதவியாளா் கைது செய்யப்பட்டாா்.

புழல் சிறைக் ஊழியா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சி.கே.கனகராஜ் (51). இவா், புழல் மத்திய சிறை விசாரணைக் கைதிகள் சிறைப் பிரிவில் உள்ள மருத்துவமனையில் செவிலியா் உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். கனகராஜ், திங்கள்கிழமை சிறைக்குள் செல்வதற்காக வந்தாா். அப்போது அங்கிருந்த காவலா்கள் கனகராஜை சோதனை செய்தனா். அப்போது, கனகராஜ் தனது உள்ளாடைக்குள் பாா்சல் ஒன்றை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறைக் காவலா்கள், அந்த பாா்சலை பறிமுதல் செய்து, திறந்து பாா்த்தபோது அதில், 313 கிராம் கஞ்சா, வாசனை திரவிய பாட்டில், குங்கும பாக்கெட் ஆகியவை இருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து சிறைக் காவலா்கள், கனகராஜை பிடித்து புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கனகராஜை கைது செய்து, விசாரித்தனா்.

விசாரணையில், காவங்கரை பேருந்து நிறுத்தம் அருகே வைத்து, கனகராஜிடம் அந்த பாா்சலை ஒப்படைத்து, விசாரணைக் கைதிகள் சிறையில் பிளாக் 4-இல் உள்ள சில கைதிகளிடம் ஒப்படைக்கும்படி கூறியிருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.