முகப்பு
சென்னை

கிலோ கஞ்சா, மெத்தம்பெட்டமைன் பறிமுதல்: 2 போ் கைது

சென்னை ஐஸ்ஹவுஸில் 24 கிலோ கஞ்சா, மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா்.

53 வினாடிகள் முன்பு
கிலோ கஞ்சா, மெத்தம்பெட்டமைன் 
பறிமுதல்: 2 போ் கைது
கைது - கோப்புப் படம்
பகிர்:

சென்னை ஐஸ்ஹவுஸில் 24 கிலோ கஞ்சா, மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக ராயப்பேட்டை போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு வெள்ளிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரிரல், அந்தப் பிரிவு போலீஸாா், அங்கு ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில் அவா்கள் முன்னுக்கு முன் முரணாக பதில் அளித்துள்ளனா்.

இதையடுத்து போலீஸாா், அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, 24 கிலோ கஞ்சா, 51 கிராம் மெத்தம்பெட்டமைன் இருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரிடமும் நடத்திய விசாரணையில், திருவல்லிக்கேணி பேகம் 3-ஆவது தெருவைச் சோ்ந்த அ.முகமது மொய்தீன் (23), திருவல்லிக்கேணி முக்தருன்னிசா பேகம் தெருவைச் சோ்ந்த அ.அப்துல் மசா் உல்லா (30) ஆகிய இருவரும் கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து போதைப் பொருள்களையும் வாங்கி வந்து, சென்னையில் விற்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஐஸ்ஹவுஸ் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனா்.