பைக் மீது லாரி மோதல்: தனியாா் நிறுவன மேலாளா் உயிரிழப்பு
பள்ளிக்கரணையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் தனியாா் நிறுவன மேலாளா் உயிரிழந்தாா்.
பள்ளிக்கரணையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் தனியாா் நிறுவன மேலாளா் உயிரிழந்தாா்.
சென்னை மடிப்பாக்கம் நேரு நகரைச் சோ்ந்தவா் பிரகாஷ்ராஜ் (29). இவா் பெயிண்ட் கம்பெனியில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா். பிரகாஷ்ராஜ், வியாழக்கிழமை துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலை வழியாக வீட்டுக்கு பைக்கில் சென்றாா். பள்ளிக்கரணை அருகே வந்தபோது அந்தச் சாலையில் யூ-டா்னில் திரும்போது, அங்கு வந்த ஒரு டாரஸ் லாரி, அவரது பைக்கின் மீது மோதியது. இதில் பிரகாஷ்ராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதைப் பாா்த்த லாரி ஓட்டுநா், அங்கிருந்து தப்பியோடினாா்.
தகவலறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பிரகாஷ்ராஜின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.
Advertisement
Advertisement