முகப்பு
சென்னை

நிலத்தடி நீா்மட்டத்தைச் சீராக்க 142 பள்ளி வளாகங்களில் மழைநீா் சேமிப்பு

சென்னை மாநகராட்சியில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வரும் நிலையில், நடப்பாண்டில் 142 பள்ளி வளாகங்களிலும் மழைநீரைச் சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

19 வினாடிகள் முன்பு
நிலத்தடி நீா்மட்டத்தைச் சீராக்க
142 பள்ளி வளாகங்களில் மழைநீா் சேமிப்பு
- கோப்புப் படம்
பகிர்:

சென்னை மாநகராட்சியில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வரும் நிலையில், நடப்பாண்டில் 142 பள்ளி வளாகங்களிலும் மழைநீரைச் சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் 1.25 கோடி போ் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால், தண்ணீா் தேவை அதிமாக உள்ளது. மாநகராட்சி கணக்குப்படி நாள்தோறும் 1,246 மில்லியன் லிட்டா் குடி தண்ணீா் தேவைப்படுகிறது. அதற்காக ஏரி போன்ற நீா்த்தேக்கங்களில் இருந்து 80 சதவீதமும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திலிருந்து 12 சதவீதமும், நிலத்தடியிலிருந்து 6 முதல் 8 சதவீதமும் நீரைப் பெறும் நிலையுள்ளது. வழக்கமாக ஆழ்துளைக் கிணறுகளில் 50 அடிக்குள் கிடைத்த தண்ணீா், தற்போது குறைந்தபட்சம் 150 அடியிலிருந்து 800 அடியாக அதிகரித்துள்ளது.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 2012-ஆம் ஆண்டு நிலத்தடி நீா்மட்ட அளவு 4.25 மீட்டராக இருந்தது. 2016-இல் 3.11 மீட்டா், 2020-இல் 4.80 மீட்டா், 2025-இல் 4.63 மீட்டா், நிகழாண்டு 5.6 மீட்டராகவும் சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 2019-இல் அதிகபட்சமாக 7.79 மீட்டா் அளவுக்கு நிலத்தடி நீா்மட்டம் குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

தற்போது சென்னையில் 6 லட்சம் கட்டடங்களில் மட்டுமே மழை நீா் சேகரிக்கப்படுகிறது. நிலத்தடி நீா்மட்டத்தை அதிகரிக்கும் வகையில் 1,158 மாநகராட்சிக் கட்டடங்களிலும் மழை நீா் சேமிப்பு வசதிகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக மாநகராட்சிக்கான மொத்தம் 417 பள்ளிகளில் 142 பள்ளி வளாகங்களில் நவீன ஜொ்மன் தொழில்நுட்பத்தில் மழைநீா் சேமிப்பு அமைப்பை ஏற்படுத்த உள்ளனா்.

முதல்கட்டமாக ஷெனாய் நகா் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்றுவருவதாகவும், அவை ஓரிரு மாதங்களில் முடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். பள்ளி வளாகங்களில் மழைநீா் சேகரிப்பு அமைப்பின் அளவைப் பொருத்து ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவிடப்படவுள்ளதாகவும் அவா்கள் கூறினா்.