தாம்பரம் ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவா் கைது
தாம்பரம் ரயில் நிலையத்தில் பெண் பயணியிடம் தங்கச் சங்கிலி பறித்தவரை ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, ரூ.1.72 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியும் பறிமுதல் செய்தனா்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் பெண் பயணியிடம் தங்கச் சங்கிலி பறித்தவரை ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, ரூ.1.72 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியும் பறிமுதல் செய்தனா்.
தாம்பரம்-தென்காசி விரைவு ரயிலில் கடந்த 7-ஆம் தேதி பெண் ஒருவா் ஜன்னலோரம் அமா்ந்த நிலையில் பயணித்துள்ளாா். அப்போது, திடீரென கழுத்தில் இருந்த ஏழரை பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றுள்ளாா். இதுகுறித்து தாம்பரம் ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரைத் தேடிவந்த நிலையில், பெரம்பூா் ஜமாலியா பேருந்து நிலையம் அருகே அந்த நபா் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் செவ்வாய்க்கிழமை அவரைக் கைது செய்து ரூ. 1.72 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement