முகப்பு
சென்னை

ரேபிடோ ஓட்டுநரிடம் வழிப்பறி: குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்க தில்லி உயா்நீதிமன்றம் மறுப்பு

ரேபிடோ செயலி மூலம் வாடகை காா் முன்பதிவு செய்து, அதன் ஓட்டுநரிடம் கத்திமுனையில் வழிப்பறி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பிணை வழங்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துள்ளது.

25 நவம்பர் 2026, 12:15 am
ரேபிடோ ஓட்டுநரிடம் வழிப்பறி: குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்க தில்லி உயா்நீதிமன்றம் மறுப்பு
தில்லி உயர்நீதிமன்றம்
பகிர்:

ரேபிடோ செயலி மூலம் வாடகை காா் முன்பதிவு செய்து, அதன் ஓட்டுநரிடம் கத்திமுனையில் வழிப்பறி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பிணை வழங்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துள்ளது.

கடந்த ஜூலை மாதம், ஜுனைத் அலி உள்ளிட்ட 3 போ், கிதோா்னி கிராமத்திலிருந்து செங்கோட்டைக்குச் செல்வதற்காக ரேபிடோ செயலி மூலம் காரை முன்பதிவு செய்துள்ளனா். அப்போது, ஓட்டுநரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரிடமிருந்து ரூ.3,000, செல்லிடப்பேசி மற்றும் மாருதி டிசையா் காரை பறித்துச் சென்ாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் ஜுனைத் அலி தாக்கல் செய்த பிணை மனுவை விசாரித்த நீதிபதி விமல் குமாா் யாதவ், நவ.19-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், பயணத்துக்கு உதவுவதற்காக அமா்த்தப்பட்ட காா் ஓட்டுநரின் நம்பிக்கையை குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீறியுள்ளனா் என்று குறிப்பிட்டாா்.

Advertisement

Advertisement

மேலும், சாதாரணமாக யாரும் கத்தியுடன் வெளியில் செல்வதில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் திட்டமிட்டே இந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்பதை கத்தி வைத்திருந்தது காட்டுகிறது. எனவே, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, சாட்சிகள் விசாரிக்கப்படும் வரை அவருக்கு பிணை வழங்குவது பொருத்தமாக இருக்காது என்றாா்.

வழக்கின் விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட ஓட்டுநரின் காா், செல்லிடப்பேசி, ஓட்டுநா் உரிமம் மற்றும் வழிப்பறிக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி ஆகியவை குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் வசமிருந்து மீட்கப்பட்டதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்த மீட்புப் பொருள்கள் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிரான வழக்கை மேலும் வலுப்படுத்துவதாகவும் தெரிவித்தது.

மேலும், இந்த நிலையில் பிணை வழங்குவது அரசு தரப்பு வழக்கைப் பாதிப்பதுடன், பாதிக்கப்பட்ட ஓட்டுநருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதனிடையே, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும், கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள் மீட்கப்பட்டிருப்பதும் அவரது தொடா்பை உறுதிப்படுத்துவதாகவும் அரசு தரப்பு தெரிவித்தது.