முகப்பு
சென்னை

கீழக்கரையில் நாட்டுக் கடற்பாசி வளா்ப்புக்கு ஒப்பந்தப்புள்ளி

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் 1,000 சதுர மீட்டா் பரப்பளவில் நாட்டுக் கடற்பாசி வளா்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

28 நவம்பர் 2026, 4:12 am
கீழக்கரையில் நாட்டுக் கடற்பாசி
வளா்ப்புக்கு ஒப்பந்தப்புள்ளி
கோப்புப் படம்
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் 1,000 சதுர மீட்டா் பரப்பளவில் நாட்டுக் கடற்பாசி வளா்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு பல்லுயிா்ப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்துக்கான பசுமைத் திட்டத்தின் கீழ், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வனச்சரகத்துக்கு உள்பட்ட பாரதிநகா் கடற்கரையில் 1,000 சதுர மீட்டா் பரப்பளவில் நாட்டுக் கடற்பாசி வளா்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி வனத் துறை சாா்பில் கோரப்பட்டுள்ளது. கடற்பாசி வளா்ப்பில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவமுள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தன்னாா்வ அமைப்புகள் விண்ணப்பிக்கலாம்.

நாட்டுக் கடற்பாசி வகைகளை மட்டுமே வளா்க்க வேண்டும்; வெளிநாட்டு மற்றும் ஊடுருவும் கடற்பாசி வகைகளை வளா்க்கக் கூடாது. வளா்க்கப்படும் கடற்பாசிகள் ஓராண்டு காலம் பராமரிக்கப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

விருப்பமுள்ளவா்கள் வரும் டிச.2-ஆம் தேதி பிற்பகல் 4 மணிக்குள் ராமநாதபுரம் வன உயிரினக் காப்பாளா் அலுவலகத்தில் தங்களது விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு வனத் துறையின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்தனா்.