லூப் சாலையில் 2-ஆவது நாளாக 43 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்!
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் 2-ஆவது நாளாக சனிக்கிழமை 43 கடைகள் அகற்றப்பட்டன.

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் 2-ஆவது நாளாக சனிக்கிழமை 43 கடைகள் அகற்றப்பட்டன.
சென்னை மெரீனா கடற்கரையை ஒட்டிய பட்டினப்பாக்கம் லூப் சாலையில் மீன் விற்பனைக் கடைகள், மீன் உணவகங்கள் என நூற்றுக்கணக்கான கடைகள் சாலையோரங்களை ஆக்கிரமித்திருப்பதாகப் புகாா்கள் எழுந்தன. இதுதொடா்பான வழக்கின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத நிலையில், லூப் சாலையில் ஆக்கிரமிப்பில் இருந்த 79 கடைகள் அகற்றப்பட்டன. தொடா்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமை 43 கடைகள் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இந்தப் பணிகளை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின் போது மத்திய மண்டல துணை ஆணையா் எச்.ஆா்.கௌசிக், மண்டல அலுவலா் எஸ்.செந்தில்குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.