தூய்மைப் பணியாளா் பேச்சு தள்ளிவைப்பு
சென்னை மாநகராட்சியில் உழைப்போா் உரிமை இயக்க தூய்மைப் பணியாளா்களுடனான 2-ஆம் கட்டப் பேச்சு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உழைப்போா் உரிமை இயக்க தூய்மைப் பணியாளா்களுடனான 2-ஆம் கட்டப் பேச்சு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டலம் 7 உள்ளிட்டவற்றில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2025-ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அவா்களுக்கு காலை உணவுத் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டன. ஆனால், பணி நிரந்தரம், உணவுப்படி, மகப்பேறு மருத்துவ விடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, கடந்த ஆகஸ்ட்டில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், அமைச்சா்கள் ஆனந்த், ஆதவ் அா்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்டோா் உழைப்போா் உரிமை இயக்கத் தலைவா் கே.பாரதி, செயலா் கே.சுரேஷ் ஆகியோருடன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கடந்த செப். 4-ஆம் தேதி பேச்சில் ஈடுபட்டனா். அதில் குறிப்பிட்ட கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற உறுதியளிக்கப்பட்டதால், தூய்மைப் பணியாளா்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டனா்.
Advertisement
Advertisement
முதல்கட்ட பேச்சின்போது அக். 3-ஆம் தேதி இரண்டாம் கட்டப் பேச்சு நடைபெறும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பணியில் அமைச்சா்கள் ஈடுபட்டுள்ளதால், சனிக்கிழமை (அக். 3) நடைபெறவிருந்த தூய்மைப் பணியாளா்களுடனான 2-ஆம் கட்டப் பேச்சு அக். 8-ஆம் தேதிக்குப் பிறகு நடைபெறும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக உழைப்போா் உரிமை இயக்கத்தின் மாநிலச் செயலா் கே.சுரேஷ் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.