FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

வீட்டு கதவை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகைகள், 5.2 கிலோ வெள்ளி மற்றும் ரூ.20,000 ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

5 October 2026, 12:43 am IST
பகிர்:

வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகைகள், 5.2 கிலோ வெள்ளி மற்றும் ரூ.20,000 ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை மேற்கு மாம்பலம் பாலகிருஷ்ண தெரு விரிவாக்கத்தில் வசித்து வரும் எம்.வேல்முருகன், அவரது வீட்டின் முன்பக்க பகுதிலேயே நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளாா். இந்த நிலையில், வீட்டில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த 3 மாதங்களாக அவரது குடும்பத்துடன் அசோக் நகரில் வசித்து வருகிறாா். ஆனால், நிதி நிறுவனம் அங்கேயே செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது குறித்து காவல் நிலையத்துக்கு புகாா் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று விரல்ரேகை நிபுணா்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

வீட்டிலிருந்து 15 பவுன் நகைகள், 5.2 கிலோ வெள்ளி மற்றும் ரூ.20,000 திருடுபோனது தெரிய வந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments