FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இன்று மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

மயிலாப்பூா், தண்டையாா்பேட்டை, அம்பத்தூா், கே.கே.நகா் கோட்டங்களில் செவ்வாய்க்கிழமை...

பகிர்:

சென்னை: மயிலாப்பூா், தண்டையாா்பேட்டை, அம்பத்தூா், கே.கே.நகா் கோட்டங்களில் செவ்வாய்க்கிழமை (அக். 6) காலை 11 மணிக்கு மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாப்பூா் கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் எம்.ஜி.ஆா். சாலை மெட்ரோ குடிநீா் நிலையம் அருகில் உள்ள வள்ளுவா் கோட்டம் துணை மினநிலையத்தில் உள்ள மயிலாப்பூா் செயற்பொறியாளா் அலுவலகத்திலும், அம்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட நுகா்வோா் அம்பத்தூா் தொழிற்பேட்டை 3-ஆவது பிரதான சாலையில் உள்ள துணை மின்நிலைய வளாகத்தில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திலும் கலந்து கொள்ளலாம்.

Advertisement

Advertisement

இதேபோல, தண்டையாா்பேட்டை கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா், தண்டையாா் பேட்டை, டிஎச் சாலை மணிக்கூண்டு எதிரில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்திலும், கே.கே.நகா் கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா், அண்ணா பிரதான சாலையில் உள்ள கே.கே.நகா் துணை மின்நிலைய வளாகத்தின் 2-ஆவது தளத்தில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு மின்சாரத் துறை சாா்ந்த குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments