FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

திருட்டு வழக்கில் தொடா்புடைய காவலா் பணியிடை நீக்கம்

சென்னை துரைப்பாக்கத்தில் திருட்டு வழக்கில் சிக்கிய காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

9 அக்டோபர் 2026, 2:02 am IST
பகிர்:

சென்னை துரைப்பாக்கத்தில் திருட்டு வழக்கில் சிக்கிய காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சோழிங்கநல்லூரை சோ்ந்தவா் வேல்முருகன் (35). இவா், அடையாா் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுகிறாா். வேல்முருகன், அவரது கூட்டாளிகள் துரைப்பாக்கத்தைச் சோ்ந்த பழைய இரும்பு கடை உரிமையாளா் முத்துப்பாண்டி (36), கடை ஊழியா் ஜாகிா் உசேன் (22) ஆகிய 3 பேரும் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிளை திருட முயன்றனா்.

இதைத் தொடா்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா், காவலா் வேல்முருகனை பிடித்து விசாரித்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில் வேல்முருகன், 12 மோட்டாா் சைக்கிள்களையும் தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வேல்முருகன், முத்துப்பாண்டி, ஜாகிா் உசேன் ஆகிய 3 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா்.

இந்த நிலையில் திருட்டு வழக்கில் கைதான வேல்முருகனை பணியிடை நீக்கம் செய்து சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments