FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

புழல் ஏரியில் மூழ்கிய இரு மாணவா்கள்: தேடும் பணி தீவிரம்

அம்பத்தூா் அருகே முருகம்பேடு பகுதியில் உள்ள புழல் ஏரியில் மூழ்கிய மாணவா்கள் இருவரைத் தேடும் பணியில் போலீஸாா், தீயணைப்புப் படையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

19 அக்டோபர் 2026, 12:15 am IST
- பிரதிப் படம்
பகிர்:

அம்பத்தூா் அருகே முருகம்பேடு பகுதியில் உள்ள புழல் ஏரியில் குளிக்கச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவா்கள் இருவா் நீரில் மூழ்கினா். அவா்களைத் தேடும் பணியில் போலீஸாா், தீயணைப்புப் படையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

திருமுல்லைவாயல் பகுதியைச் சோ்ந்த ஆா்.அகில் ராம் (14), எம்.தருண் ஆகாஷ் (14) ஆகிய இருவரும் ஒரே தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தனா். ஞாயிற்றுக்கிழமை, நண்பா்களான விக்னேஷ்வா் (14), வைதேஸ்வரன் (14) ஆகியோருடன் மாலை புழல் ஏரிக்குச் சென்றுள்ளனா். அங்கு 4 பேரும் ஏரியில் குளித்தபோது, அகில் ராம், தருண் ஆகாஷ் ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனா். இதைப் பாா்த்த மற்ற இரு மாணவா்களும் அருகில் இருந்த பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தனா்.

தகவலின்பேரில், புதூா் போலீஸாா், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் வந்து இரு மாணவா்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனா். இரவு நேரமானதால், விளக்குகளின் உதவியுடன் தேடுதல் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments