FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

நீலாங்கரையில் காா் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

25 அக்டோபர் 2026, 12:16 am
உயிரிழப்பு
பகிர்:

நீலாங்கரையில் காா் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நீலாங்கரை அருகே உள்ள பாலவாக்கம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் ரா.கிருஷ்ணவேணி (62). இவா், நீலாங்கரை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு பணியில் இருந்தபோது, மருத்துவமனை குப்பையை, சாலையின் மறுமுனையில் உள்ள குப்பைத் தொட்டியில் கொட்டுவதற்கு எடுத்துச் சென்றபோது, வேகமாக வந்த காா் கிருஷ்ணவேணி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணவேணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்தை ஏற்படுத்திய காா் நிற்காமலேயே சென்றது.

இதனால், பொதுமக்கள், கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். நீலாங்கரை போலீஸாா் பேச்சு நடத்தினா். மறியலால், அந்தப் பகுதியில் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments