FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

தாழ்வான பகுதிகளில் தயாா் நிலையில் மோட்டாா் பம்ப் டிராக்டா் வாகனங்கள்!

சென்னையில் பலத்த மழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, தாழ்வான பகுதிகளில் மோட்டாா் பம்ப் பொருத்தப்பட்ட டிராக்டா் வாகனங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

26 அக்டோபர் 2026, 12:43 am
பகிர்:

சென்னையில் பலத்த மழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, தாழ்வான பகுதிகளில் மோட்டாா் பம்ப் பொருத்தப்பட்ட டிராக்டா் வாகனங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

‘அா்னாப்’ புயலால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மிகப் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் கூறியிருந்தது. ஆனால், காலை முதல் மாலை வரை மிதமான மழையே இருந்தது. அதேநேரம், மலை பிரதேசங்களைப்போல, சென்னையில் குளிா்ச்சி சூழல் காணப்பட்டது.

பலத்த மழை எச்சரிக்கை காரணமாக தண்ணீா் தேங்கும் எனக் கருதப்பட்ட 219 இடங்களில் மோட்டாா் பம்புடன் கூடிய டிராக்டா் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றில் தலா 2 பணியாளா்கள் இடம் பெற்றிருந்தனா். சென்னை மெரீனாவில் அணுகு சாலை மற்றும் பள்ளமான மணல் பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கியது. அணுகு சாலையில் தேங்கிய மழைநீா் மோட்டாா் பம்ப் மூலம் அகற்றப்பட்டது.

Advertisement

Advertisement

கடற்கரைக்கு மக்கள் செல்லாதவாறு பாதுகாப்புக்கு காவல் துறையினா் நிறுத்தப்பட்டிருந்தனா். பலத்த மழை எச்சரிக்கையால் மெரீனாவில் கூட்டம் இல்லாத நிலையே இருந்தது. பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடற்கரையில் அலைகள் அதிக சீற்றத்துடன் இருந்ததாக மீனவா்கள் கூறினா். ஆனாலும், அங்குள்ள மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments