FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

தமிழக சிறைத் துறை இயக்குநராக ஏடிஜிபி சங்கா் பொறுப்பேற்பு

தமிழக சிறைத் துறை இயக்குநராக ஏடிஜிபி கே.சங்கா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

31 அக்டோபர் 2026, 2:32 am
வாசு செய்திக்கான படம். தமிழக சிறைத்துறை இயக்குநராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா் ஏடிஜிபி கே.சங்கா்.
பகிர்:

தமிழக சிறைத் துறை இயக்குநராக ஏடிஜிபி கே.சங்கா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

கைதிகள் தப்பிய சம்பவங்களின் எதிரொலியாக தமிழக சிறைத் துறை டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோா், தமிழ்நாடு மின்சார வாரிய ஊழல் தடுப்புப் பிரிவுக்கும், மாநில போதைப் பொருள் நுண்ணறிவு ஏடிஜிபி கே.சங்கா், சிறைத் துறைக்கும் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

சங்கா் பொறுப்பேற்பு: சென்னை எழும்பூரில் உள்ள தமிழக சிறைத் துறை இயக்குநராக ஏடிஜிபி கே.சங்கா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். முன்னதாக, சிறைத் துறையின் சாா்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. சிறைத் துறையின் புதிய ஏடிஜிபியாக பொறுப்பேற்ற சங்கருக்கு, தமிழக காவல்துறை உயா் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

ஐஐடி-யில் படித்தவா்: கேரள மாநிலம் கோட்டயத்தைச் சோ்ந்த சங்கா், ஐஐடியில் பி.டெக்., எம்இ படித்தவா். கடந்த 1996-ஆம் ஆண்டு ஐபிஎஸ் தோ்ச்சி பெற்று, தமிழக காவல் துறை பணியில் சோ்ந்துள்ளாா். தமிழக காவல் துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்துள்ள சங்கா், சிறப்பாகப் பணிபுரிந்தமைக்காக குடியரசுத் தலைவா் மெச்சத்தக்க பணிக்கான காவல் பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களைப் பெற்றவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments