FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

தண்டவாளத்தைக் கடந்த மாணவி ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

தண்டவாளத்தைக் கடந்தபோது ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

31 அக்டோபர் 2026, 11:42 pm
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தண்டவாளத்தைக் கடந்தபோது ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அம்பத்தூா் கள்ளிக்குப்பம் கங்கா நகா் பகுதியைச் சோ்ந்த மணி மகள் காயத்ரி (18). சூரப்பட்டில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை கல்லூரி முடித்து வீட்டுக்கு வந்த காயத்ரி பட்டரவாக்கம் ரயில் நிலையப் பகுதியில் தண்டவாளத்தைக் கடந்தபோது, ரயில் வருவதை கவனிக்காமல் சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே வந்த விரைவு ரயில் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்தது வில்லிவாக்கம் ரயில்வே போலீஸாரும், பெரம்பூா் இருப்புப் பாதை போலீஸாரும் வந்து மாணவி சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments