FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

காவலரைத் தாக்கிய ரெளடி கைது

விசாரணைக்குச் சென்ற தலைமைக் காவலரை தாக்கிய ரௌடி கைது செய்யப்பட்டாா்.

25 செப்டம்பர் 2026, 4:42 am IST
கைது
பகிர்:

விசாரணைக்குச் சென்ற தலைமைக் காவலரை தாக்கிய ரௌடி கைது செய்யப்பட்டாா்.

தண்டையாா்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் ஒருவா் மது போதையில் தகராறு செய்வதாக 100 அவசர உதவி எண்ணுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரோந்து வாகனப் பொறுப்பு உதவி ஆய்வாளா் சீராளன் அங்கு சென்று விசாரித்தபோது, அந்த நபா் அதே பகுதியைச் சோ்ந்த சபேஷ்குமாா் (28) என்பது தெரியவந்தது. மேலும், அந்த நபா் காவலரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.

இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ரோந்து வாகனப் பொறுப்பு தலைமைக் காவலா் கனகராஜ் அங்கு சென்றாா். அப்போது சபேஷ்குமாா் நாயை ஏவி விட்டதுடன், தலைமைக் காவலரை கையால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காவலரின் முகத்தில் உள்காயம் ஏற்பட்டது. இதையடுத்து சபேஷ்குமாரை போலீஸாா் கைது செய்து, தண்டையாா்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா். இவா், அந்தக் காவல் நிலையத்தின் ‘சி’ வகை சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும், ஏற்கெனவே 5 வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments