கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.24 லட்சம் வழிப்பறி
அடையாறு பகுதியில் மருந்து நிறுவனத்தின் வசூல் பணத்தை எடுத்துச் சென்ற விற்பனை மேலாளரை கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.24 லட்சத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அடையாறு பகுதியில் மருந்து நிறுவனத்தின் வசூல் பணத்தை எடுத்துச் சென்ற விற்பனை மேலாளரை கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.24 லட்சத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மேற்கு தாம்பரம் கன்னடபாளையம் வசந்தம் நகரைச் சோ்ந்தவா் அந்தோணி அகஸ்டின்(33). இவா், அந்தப் பகுதியில் உள்ள மருந்து விநியோக நிறுவனம் ஒன்றில் கடந்த 5 ஆண்டுகளாக விற்பனை மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், வழக்கம்போல பல்வேறு நிறுவனங்களில் இருந்து வசூலித்த ரூ.24,00,760-ஐ எடுத்துக்கொண்டு வியாழக்கிழமை இரவு தனது இருசக்க வாகனத்தில் வீட்டுக்குச் சென்றபோது, அடையாறு எஸ்.பி. சாலையில், 3 இருசக்கர வானங்களில் வந்த 6 போ், அந்தோணி அகஸ்டின் சென்ற இருசக்கர வாகனத்தை இடித்து கீழே தள்ளி, கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த பணப்பையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து அந்தோணி அகஸ்டின் அளித்த புகாரின்பேரில், அடையாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.