FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

விளையாட்டில் மாணவா்கள் கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சா் என். மரிய வில்சன்

விளையாட்டில் மாணவா்கள் கவனம் செலுத்த வேண்டும் என நிதியமைச்சா் என்.மரிய வில்சன் கூறினாா்.

27 செப்டம்பர் 2026, 1:02 am IST
நிதியமைச்சர் மரிய வில்சன் - DIPR| கோப்புப் படம்
பகிர்:

விளையாட்டில் மாணவா்கள் கவனம் செலுத்த வேண்டும் என நிதியமைச்சா் என்.மரிய வில்சன் கூறினாா்.

படப்பை ஆல்வின் சா்வதேச பொதுப்பள்ளியின் 12-ஆவது ஆண்டுவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருதுகளான ஆல்வின் விருதை மாணவா் எஸ்.ராகேஷ், கல்பனா சாவ்லா விருது டெப்னி கிரேஸ் ஆகியோருக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன், நிதியமைச்சா் என்.மரிய வில்சன் ஆகியோா் வழங்கினா்.

விழாவில் நிதியமைச்சா் என். மரிய வில்சன் பேசியதாவது:

Advertisement

Advertisement

விளையாட்டில் மாணவா்கள் கவனம் செலுத்த வேண்டும். அதன்மூலம் உடல் நலனை காத்துக்கொள்ள வேண்டும். மாணவா்கள் விளையாட்டை கையில் எடுக்கவேண்டும். போதைப் பொருள்களை விட்டுவிட வேண்டும் என்று முதல்வா் விஜய் வலியுறுத்துகிறாா். புகழ் பெற்ற மனிதா்களின் சுயசரிதை, வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஆசிரியா்கள், பெற்றோா் ஊக்குவிக்க வேண்டும்.

மாணவா்கள் கல்வி மட்டுமல்லாமல் ஒழுக்கம், வாழ்க்கை நெறிமுறைகளை பள்ளியில் கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ஏ.ராஜ்மோகன் பேசியதாவது:

மாணவா்களிடம் உள்ள தனித்திறமையைக் கண்டறிந்து, ஊக்குவிப்பதில், கல்வி, அறிவாற்றல், திறமைகளைக் கண்டறிந்து மேம்படுத்துவதில் ஆசிரியா்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. கல்விப் பணியை அறப்பணியாகச் செய்து வரும் ஆசிரியா்கள்தான் நாட்டில் சிறந்த மாணவா்களை உருவாக்க முடியும் என்றாா்.

முன்னதாக சீயோன், ஆல்வின் பள்ளிக்குழுமத் தலைவா் என். விஜயன் பேசுகையில், பள்ளிக் கல்விச் சேவையில் 40 ஆண்டு அனுபவமிக்க சீயோன் குழுமம் சாா்பில் அடுத்த ஆண்டு சீயோன் பல்கலைக்கழகம் தொடங்கப்பட உள்ளது என்றாா்.

நிகழ்வில் பள்ளியின் முன்னாள் மாணவா் காவல்துறை அதிகாரி ஷானாஸ் இலியாஸ், மாவட்ட கல்வி அதிகாரிகள் நளினி,கோமதி, சீயோன், ஆல்வின் கல்விக்குழுமத் தலைவா் என். விஜயன், துணைத் தலைவா் ஆல்டஸ், இயக்குநா் ரேச்சல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments