FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கோயில் திருவிழாவில் மோதல்: 11 பேர் கைது

உத்தரமேரூர் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

உத்தரமேரூர் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

உத்தரமேரூர் வட்டம், கருவேப்பம்பூண்டி கிராமத்தில் பழைமை வாய்ந்த பொன்னி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

Advertisement

Advertisement

நிகழாண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிராமத்தில் காலை முதல் எங்கு பார்த்தாலும் திருவிழா கோலாகலமாகக் காணப்பட்டது. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனுக்கு சீர் செய்தல் மாலையில் நடைபெற்றது.

இதற்காக ஒரு பிரிவினர் சீர் எடுத்துக் கொண்டு கோயிலுக்கு வந்தனர். அவர்களில் இளைஞர்கள் சிலர், திருவிழாவுக்கு வந்திருந்த பெண்களை கேலி, கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரும் ஒரு வரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர், ஒரு தரப்பைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் உத்தரமேரூர்- காஞ்சிபுரம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து உத்தரமேரூர் காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீஸார் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்தனர். பொதுமக்களிடம் போலீஸார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

இதுகுறித்து ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சுரேஷ்பாபு கொடுத்த புகாரின் பேரில், கருவேப்பம்பூண்டி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை, ஸ்ரீதர், வெற்றிவேல், ராமராஜ், கார்த்திக், கார்த்திக்குமார், சுமன், ஆசைத்தம்பி, வானவராயன், திருக்குமரன், தீபக்ராஜ் ஆகிய 11 பேரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அங்கு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments