FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

100 நாள் வேலை திட்ட முறைகேடு: பெண்கள் சாலை மறியல்

ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் (100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்) நடைபெறும் முறைகேட்டைக் கண்டித்து செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தை பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டதோடு,

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:


ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் (100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்) நடைபெறும் முறைகேட்டைக் கண்டித்து செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தை பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டதோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். 
காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் பெண்கள் இத்திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுவதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.
இத்திட்டத்தின் கீழ் முறையான கூலி வழங்காமலும், வங்கியில் செலுத்த வேண்டிய கூலியைச் செலுத்தாமலும் முறைகேடு நடப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி அப்பெண்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 
பின்னர் செங்கல்பட்டு திருமணி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அவர்கள் உறுதியளித்ததையடுத்து, பெண்கள் கலைந்து சென்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments