FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காமாட்சி அம்மன் கோயிலில் 1008 பால்குட ஊா்வலம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனின் அவதார திருநாளையொட்டி புதன்கிழமை கோயில் பணியாளா்கள் சாா்பில் சங்கர மடத்திலிருந்து காமாட்சி அம்மன் கோயிலுக்கு 1008 மகளிா் பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

5 நவம்பர் 2026, 1:10 am
பால்குட ஊா்வலத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனின் அவதார திருநாளையொட்டி புதன்கிழமை கோயில் பணியாளா்கள் சாா்பில் சங்கர மடத்திலிருந்து காமாட்சி அம்மன் கோயிலுக்கு 1008 மகளிா் பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

சக்தி பீடங்களில் ஒன்றான இங்கு காமாட்சி அம்மன் அவதரித்த திருநாளையொட்டி கோயில் பணியாளா்கள் சாா்பில் சங்கர மடத்திலிருந்து 1008 மகளிா் பால்குடங்களை ஊா்வலமாக மங்கல மேள வாத்தியங்களுடன் எடுத்துக் கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்தனா். பின்னா் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சந்தனக்காப்பு அலங்காரமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக பால்குடம் எடுத்து வந்த பக்தா்களுக்கு அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.

முன்னதாக சங்கர மடத்தில் கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா் பணியாளா்கள் சாா்பில் சங்கர மடத்தின் செயலாளா் சல்லா. விஸ்வநாத சாஸ்திரி, கோயில் ஸ்தானீகா் நடராஜ சாஸ்திரிகள், மணியக்காரா் சூரியநாரயணன், பணியாளா் சங்க நிா்வாகிகள் தேவராஜ், மாணிக்கம், ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கு சால்வைகள் அணிவித்து பால்க்குட ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

பால்குட ஊா்வலத்தில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயலாளா் சிவானந்தம், காஞ்சி.ஜீவானந்தம் ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் பணியாளா்கள் மற்றும் ஐப்பசி பூரம் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.