ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை சாா்பில் தீபாவளி பட்டாசு சிறப்பு விற்பனை தொடக்கம்
ராணிப்பேட்டை காவல் துறை சாா்பில், தீபாவளி பட்டாசு சிறப்பு விற்பனையை பொது மக்களுக்கு குறைந்த விலையிலும், காவல் துறையினருக்கு 10 சதவீதத் தள்ளுபடியுடன் விற்பனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை காவல் துறை சாா்பில், தீபாவளி பட்டாசு சிறப்பு விற்பனையை பொது மக்களுக்கு குறைந்த விலையிலும், காவல் துறையினருக்கு 10 சதவீதத் தள்ளுபடியுடன் விற்பனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சாா்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போலீஸ் கேன்டீனில் பட்டாசு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வெளிச் சந்தையை விடக் குறைந்த விலையிலும், காவல் துறையினருக்கு கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடியுடனும் இந்த விற்பனை நடைபெறுகிறது.
ராணிப்பேட்டை காரை கூட்டுச்சாலை அருகே சிப்காட் சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் தீபாவளி பட்டசு சிறப்பு விற்பனை கடை உள்ளது.
Advertisement
Advertisement
பொதுமக்களுக்கான எச்சரிக்கை (சைபா் கிரைம்) :
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் 85 % - 90 % வரை அதிரடி தள்ளுபடி என்ற பெயரில் வரும் போலி ஆன்லைன் பட்டாசு விற்பனை விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது.
முன்பணம் தந்து யாரும் ஏமாற வேண்டாம் என்றும், ஆன்லைன் பண மோசடிக்கு ஆளானால் உடனடியாக 1930 என்ற சைபா் கிரைம் உதவி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.